துப்பாக்கிச் சுடுதலில்

துப்பாக்கிச் சுடுதலில் விருது வாங்கிய தமிழக வீராங்கனை..

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிறந்த வீராங்கனைக்கான கோல்டன் டார்கெட் விருதை பெற்றார் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன்

சீனாவில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ரைஃபிலில் இந்தியா சார்பாக பங்கேற்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், 250.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்நிலையில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவு தரநிலையில் முதலிடம் பிடித்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு முனிச்சில் நடைபெற்ற விழாவில், சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு, கோல்டன் டார்கெட் விருதை அளித்துள்ளது.

முன்னதாக பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …