திமுக

திமுக-33, அதிமுக-6: புதிய தலைமுறையின் கருத்துக்கணிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தேர்தல் கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 31-33 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 3-6 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் மற்றும் தினகரன் கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றே இந்த கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பால் திமுக கூட்டணியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்று 53%க்கும் மேற்பட்டோர் கூறியுள்ளதாகவும், மீண்டும் மோடியே பிரதமராக வேண்டும் என்று 22% சதவிகிதத்தினர் கூறியுள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது

ஆனால் அதே நேரத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் உரிமையாளர் பாரிவேந்தர், திமுக கூட்டணியில் இடம்பெற்று

திமுக சின்னத்தில் போட்டியிடுகிறார். எனவே இந்த கருத்துக்கணிப்பு குறித்த நம்பகத்தன்மை குறித்தும் நெட்டிசன்கள் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர் பல கருத்துக்கணிப்புகள் பொய்யாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள் மக்களின் நாடித்துடிப்பை சரியாக கணித்தவர்கள் இதுவரை யாரும் இல்லை என்றே கருத்து கூறி வருகின்ற்னர்.

எனவே இந்த கருத்துக்கணிப்பு எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்பதை தேர்தல் முடிவு வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்

About அருள்

Check Also

திமுக

அடிச்சு தூக்கிய திமுக வாரிசுகள்: வெற்றி கோட்டையான சென்னை!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesதிமுக வாரிசுகள் மக்களவை தேர்தலில் சென்னையை திமுகவின் வெற்றி கோட்டையாக மாற்றியுள்ளது. தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், …