தம்பதியர்

தம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது.

மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.

ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது.

இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்ல லாம்…

‘Alcohol may increase your desire, but it takes away the performance’.

இதில் பாதிதான் உண்மை. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.

மது அருந்துவதால் மனத்தடை ஒருவிதத்தில் குறைகிறது என்பது உண்மையே.

என்ன செய்கிறோம் என்பது கூட சில நேரங்களில் தெரியாது.

அது, மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்களை கட்டுப்படுத்தி விடுகிறது. மது அருந்தி இருந்தால், உடலுறவு கொள்ளும்போது நேரத்தின் மீது கவனம் இருக்காது.

அதிக நேரம் ஈடுபட்டது போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கும்.

அது உண்மை இல்லை.தொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும்.

ஆணுக்கு செக்ஸ் ஹார்மோன் சுரக்கும் போது, கல்லீரல்தான் அதைப் பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது.

கல்லீரல் பாதிப்படைவதால், ஹார்மோன் சுரப்பு சரியாக இருந்தாலும், உடலால் அதன் வேலைகளை சரியாக செய்ய இயலாது.

இதனால்தான் ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது… பெண்ணுக்கு செக்ஸில் ஈடுபாடு வராமல் போகிறது.

சிலர், ‘மன அழுத்தத்தைக் குறைக்க, பப்பில் ஆடுகிறோம்’ என்பார்கள்.

மது அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் குறையாது.

இரைச்சலான இசைக்கு ஆடுவதால், மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து உடல்நலனைக் கெடுக்கும்.

அளவுக்கு மிஞ்சிய போதை, நண்பர்களோடு கண்மண் தெரியாமல் டான்ஸ் ஆடுவதையும் சண்டை போடுவதையும் சகஜமாக்கிவிடும்.

இதை நாகரிகம் என்று சொல்ல முடியாது. மது அருந்துவதால் வாயில் ஒரு வகை துர்நாற்றம் ஏற்படும்.

கணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் போது நாற்றம் அடிக்கும்…

பார்ட்னர் மீது அருவெறுப்பு ஏற்படும். செக்ஸ் தூண்டுதல் ஏற்படும் என்பதற்காக குடிக்கும் மது, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பதே உண்மை.

மது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும்

About அருள்

Check Also

உங்கள் குடும்ப

உங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!4Sharesஉங்கள் படுக்கையறை ரகசியங்கள் வரை உங்கள் நண்பர்களுடன் பகிர்கிறீர்கள் எனில் அளவு கடந்து உங்கள் குடும்ப வாழ்க்கையை …