கொரோனவால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட ஜெர்மனி அதிபர்!
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், கொரோனா அச்சம் காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்பட்டது. அந்த தடுப்பூசியை ஏஞ்சலா மெர்கலுக்கு செலுத்திய டாக்டர் கோரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஏஞ்சலா மெர்கல் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
அவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்றும், வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை கவனிப்பார் என்றும் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் துணை அதிபரும் நிதி மந்திரியுமான ஸ்கால்ஸ் கடந்த வாரம் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். மறுநாள் டுவிட்டரில் பதிவிட்ட அவர், பரிசோதனையில் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்திருப்பதாக கூறினார்.
கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 14,654 ஆக உயர்வு
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு மரணம் – சோகத்தில் திரையுலகம்