கோமுகி அணை

கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருங்குடி மக்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஏற்று, விழுப்புரம் மாவட்டத்தில் பழைய பாசன நிலங்கள் 5,860 ஏக்கரும், புதிய பாசன நிலங்கள் 5,000 ஏக்கரும் பாசன வசதி பெறும் வகையில் 8ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டு இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், விவசாய பெருமக்கள் நீரை சிக்கமான பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் பாருங்க :

சசிகலா குடும்பத்தினரின் ரூ. 1,600 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்

மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மலர்ந்த மலர்கள்

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …