சினிமாவில் வாய்ப்பிற்காக நடிகைகள் பலர் பாலியல் ரீதியான தொந்தரவுகளை சந்திப்பதாக புகார் தெரிவித்து வருகின்றனர். தற்போது பிரபல நடிகை சுர்வீன் சாவ்லாவும் பட வாய்ப்பிறக்கு பாலியல் ரீதியான தொந்தரவை சந்தித்தாக தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீரெட்டி, சின்மயி, வித்யாபாலன் ஆகியோர் இதே குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில் சுர்வீன் சாவ்லாவின் குற்றச்சாட்டும் திரையலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் சுர்வின் சாவ்லா. தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த் 2 உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஆரம்ப காலங்களில் இவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்துள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “பட வாய்ப்பிற்காக இயக்குனர் ஒருவர் எனது மார்பு பகுதியை பார்க்க வேண்டுமென கூறினார். மற்றொரு இயக்குனர் உங்களது தொடையை நான் பார்க்க வேண்டுமென்று கேட்டார் என்றார். மேலும் சினிமாவில் 5 முறை பாலியல் சீண்டல்களை தான் சந்திக்க வேண்டியதாக இருந்ததாகவும்“ சுர்வின் சாவ்லா கூறினார்.
மேலும் சினிமா தேர்வுக்கு ஒரு முறை சென்றிருந்த போது அதிக எடையுடன் இருப்பதாக கூறி என்னை வெளியேற்றினார்கள். அப்போது நான் 56 கிலோ மட்டுமே இருந்தேன். அவர்களுக்கு கண்ணாடி வாங்கி தர அப்போது விரும்பினேன் என்றும் நகைச்சுவையாக தெரிவித்தார்.