இந்த வாரமும் இவனோட அலப்பறை தானா ?

ட்விட்டரில் அபிராமியை மறைமுகமாக சாடிய சாக்‌ஷி…! போட்டுடைத்த ரசிகர்கள்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகை சாக்‌ஷி ட்விட்டரில் பிக்பாஸ் போட்டியாளர் அபிராமியை மறைமுகமாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டர்.

தற்போது நிகழ்ச்சி குழுவால் வெளியிடப்பட்ட முதல் புரோமோ வீடியோவில் பிக்பாஸ், இந்த வாரம் நடைபெறும் போட்டிகளில் யார் சிறந்து விளங்குகிறார்களோ, அவர்கள் நேரடியாக இறுதிப்போட்டியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி கடுமையாக நிலவி வரும் சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் 16 போட்டியாளர்க்ளில் ஒருவராக கலந்துகொண்ட நடிகை சாக்‌ஷி தற்போது ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/ssakshiagarwal/status/1173323191239901184

அதில், பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை சந்தித்து எதிர்மறை கருத்துக்களை பரப்புவதை நிறுத்துங்கள்.

நீங்கள் சந்திக்கும் போது செய்ய வேண்டிய பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. போட்டியின் போது யார் உங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவின் கீழ் கமெண்ட் செய்துள்ள நெட்டிசன்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக உள்ள அபிராமியைதான் சாக்‌ஷி குறிப்பிடுகிறார் என்று போட்டுடைத்துவிட்டனர்.

மேலும், பிக்பாஸ் வீட்டை விட்டு எவிக்‌ஷன் மூலம் வெளியேற்றப்பட்ட அபிராமி தான் மற்ற போட்டியாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்து வருகிறார்.

இதன் காரணமாக சாக்‌ஷி அபிராமியை தான் குறிப்பிடுகிறார்கள் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …