கல்லூரி படிக்கும் போது பேருந்தில் பெண்களை உரசியுள்ளேன் என்று நடிகர் சரவணன் கூறியதற்கு சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் அவர் ரசிகர்கள் முன் தோன்றும் வார இறுதி நாட்களே அதிகம் ரசிக்கப்படுகிறது.
அந்த வகையில் நேற்றைய போட்டியில், மீரா மிதுன் – சேரன் விவகாரத்தைப் பஞ்சாயத்து செய்த கமல் ஹாசன், குறும்படம் மூலம் சேரன் எந்த தவறும் செய்யவில்லை என்பதை உறுதி செய்தார் மேலும் மீராவுக்கு அறிவுரை வழங்கும் போது, நீங்கள் பேருந்தில் பயணம் செய்ததுண்டா?
https://twitter.com/Chinmayi/status/1155197257529954304
அதில் வேண்டுமென்றே பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களும் உண்டு என்று கமல்ஹாசன் கூற,நான் செய்திருக்கிறேன் சார் என்று கையை தூக்கினார் சரவணன்.
அப்போது கமலோ, பொதுவெளியில் கூறி சரவணன் அதையும் தாண்டி புனிதராகிவிட்டார் என்று கூற அதற்குப் பார்வையாளர்கள் அனைவரும் கை தட்டினர்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாடகி சின்மயி, நடிகர் சரவணன் பேருந்தில் பெண்களை உரசினேன் என்று வெளிப்படையாகக் கூறுகிறார்.
அதையும் அவர்கள் பெருமையுடன் ஒளிபரப்புகிறார்கள். இது அவரின் பேச்சுக்குப் பார்வையாளர்களும் கைதட்டி ரசிக்கிறார்கள்’ என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.