சிறுவன்

Child Surjith Rescue Live Updates | குழந்தை சுர்ஜித் மீட்பு பணிகள் தீவிரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நேற்று மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகிறது.

6:00 pm 

குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 48 மணி நேரம் ஆகியுள்ளது.

5:54 pm 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் இடத்திற்கு வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வருகை.

https://twitter.com/Tamilaruvimedia/status/1188421349137453056?s=20

https://twitter.com/Tamilaruvimedia/status/1188430308309438465?s=20

5:00 pm 
100 அடிக்கு குழி தோண்டிய பின்னர் தீயணைப்பு வீரர் ஒருவர் உள்ளே ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் டார்ச் லைட் உள்ளிட்ட உபகரணங்களுடன் உள்ளே இறங்குவார்.

உள்ளே இறங்கிய பின்னர் அவர் பக்கவாட்டில் துளையிட்டு, அங்கிருந்து ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்டு மேலே கொண்டு வருவார்.

4:58 pm

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றத் தேவையான தொழில் நுட்பம் இல்லாதது நாட்டின் வெட்கக் கேடு – திருமாவளவன்.திருமாவளவன்

4:46 pm 

புதிய ரிக் எந்திரத்தில் கருவிகள் பொறுத்த 1 மணி நேரம் வரை ஆகும் என்று தகவல். குழி தோண்ட தொடங்கிய பின்னர் 4 அல்லது 5 மணி நேரத்தில் பணிகள் முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்

4.45 pm

குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்தி கண்ணீரோடு கைதட்டுகிறேன்-கவிஞர் வைரமுத்து

திருச்சி,மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் இரண்டரை வயது குழந்தை சுர்ஜித் வில்சன், பராமரிப்பின்றி திறந்தவெளியில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்தது. தகவலறிந்த மணப்பாறை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே மற்றொரு துளை அமைத்து வருகிறார்கள்.அந்த குழியின் வழியே இறங்கி குழந்தையை மீட்கும் வீரர்களை வாழ்த்துவதாக கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் பகிர்ந்து உள்ளார்கவிஞர் வைரமுத்து

4:40 pm புதிய ரிக் எந்திரம் வந்து சேர்ந்தது

புதிய ரிக் எந்திரம் வந்து சேர்ந்தது ராமநாதபுரத்திலிருந்து மற்றொரு ரிக் எந்திரம் வந்து சேர்ந்தது ஏற்கனவே பயன்பட்ட ரிக் எந்திரத்தை விட 3 மடங்கு சக்தி வாய்ந்தது

4:24 pm 

ராமநாதபுரத்தில் இருந்து வரும் ரீக் இயந்திரத்தின் கூடிய வாகனம் மணப்பாறை அருகே வந்து விட்டது.  வரக்கூடிய வாகனம் தற்போது இருக்கும் வாகனத்தை விட மூன்று மடங்கு சக்தி வாய்ந்தவை

இன்னும் பதினைந்து இருபது நிமிடத்தில் மீட்புப்பணி நடக்கும் இடத்திற்கு வந்து சேரும் என்று தகவல்

4:02 pm 

சில நிமிடங்கள் பெய்த சாரல் மழை நின்று விட்டது

3:39 pm 

மீட்புப்பணி நடக்கும் இடத்தில் லேசான மழை பெய்கிறது; இதனால் மீட்புப்பணிகள் மேலும் தாமதமாகலாம்

3:37 pm 

குழந்தை சுர்ஜித் விரைவாக மீட்கப்பட பிரார்த்திக்கிறேன் – ராகுல் காந்தி

3:29 pm 
கடினமான பாறைகள் இருப்பதால் ரிக் எந்திரம் மூலம் தோண்டும் பணிகள் நிறுத்தம். பாறையை குடையும் எந்திரத்தால் குழியை மேற்கொண்டு தோண்ட முயற்சி
3:18 pm 

28 அடி வரை புதிய ஆழ்துளை கிணறு பகுதியை ஆழப்படுத்தி வருகின்றனர்.  பாறைப் பகுதியை குடைந்து செல்வதற்கு கடுமையாக இருப்பதால் புதிய  ஆழ்துளை கிணறு பகுதியில் தண்ணீரை ஊற்றி பணி செய்து வருகின்றனர்.

தற்போது அந்தப் பாறையின் துகள்களை வெளியே எடுத்து அதன் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

2:50 pm 

பாறைகள் இருப்பதால் மெதுவாக நடக்கும் குழி தோண்டும் பணிகள்

2:31 pm 

தற்போது வரை சுமார் 40 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பாறைகள் இருப்பதால் தோண்டும் பணி மெதுவாகவே நடந்து வருகிறது

2:00 pm 

100 அடி குழிக்குள் இறங்க தீயணைப்பு & மீட்புப் பணித்துறை வீரர்கள் 6 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

பயிற்சி பெற்ற ராம்குமார், திலீப், தனுஷ், அபிவாணன், கண்ணதாசன், மணிகண்டன் என்ற 6 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

6 வீரர்களும் பாதுகாப்பு உபகரணங்களுடன், இறங்க தயாராக உள்ளனர். முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர், டார்ச் லைட் உள்ளிட்டவற்றை அவர்கள் எடுத்துச் செல்வார்கள்

 

1:16 pm

1:14 pm 

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சுர்ஜித் நிலை குறித்து கேட்டறிந்தனர். சுர்ஜித்தை மீட்கும் பணி என்பது சவாலாக இருந்து வருகிறது.

நேற்று காலை 5.30 மணி வரை சிறுவனின் அசைவு. சுவாசித்தல் நல்ல நிலையில் இருந்தது. அதன்பிறகு அசைவு தெரியவில்லை.

தற்போது ரிங் இயந்திரம் மூலம் துளையிடும் பணியில் பாறை கற்கள் இருப்பதால் 4 மணி நேரம் கூடுதலாக நேரம் ஆகும்.

இந்த ரிங் இந்திரத்தை விட கூடுதலாக அதிக  திறன் கொண்ட ரிங் இயந்திரம் இராமநாதபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரம் பந்த பிறகு துரிமாக மீட்கப்படும்.

பாறைகள் அதிகமாக இருப்பதால் தற்போது வரை 26 அடி வரை துளையிடப்பட்டுள்ளது.

 

12:45 pm 

சுர்ஜித்தை மீட்கும் பணியில் அடுத்து என்ன? அமைச்சர்கள், அதிகாரிகளுடன் போர்வெல் குழுவினர் ஆலோசனை.

கடுமையான பாறைகள் உள்ளதால் மீட்பு பணியில் தொய்வு.

பாறை உள்ள பகுதியில் தற்போதுள்ள ரீக் இயந்திரத்தால் உடைக்க கடுமையாக உள்ளது.

ராமநாதபுரத்திலிருந்து வரும் சக்தி வாய்ந்த ரீக் வாகனத்துடன் கூடிய எந்திரம் எப்போது  வரும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பு

12:39 pm 

குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள நிலையில், மணப்பாறை பகுதிகளில் பலரும் தீபாவளி பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடவில்லை

12:37 pm 
தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் – சுர்ஜித்தின் பெற்றோருக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் ஆறுதல்.

 

12:31 pm 

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடும் குழந்தை சுர்ஜித் மீண்டு வர நாடே துடித்துக் கொண்டிருக்கிறது. அக்குழந்தை அனைவரின் குடும்ப சொத்தாக மாறி, அன்பின் அலையில் மூழ்கியிருக்கிறது. இறைவன் அக்குழந்தையை உயிருடன் மீட்க அருள் புரியட்டும் என பிரார்த்திக்கிறோம் – தமிமுன் அன்சாரி

11:29 am 
புதிதாக தோண்டபட்டுவரும் ஆழ்துளை கிணறு 20 அடிக்கு மேல் 90 அடிவரை பாறையாக தான் உள்ளது. இதனால் ஆழ்துளை போடுவதில் காலதாமதம் ஆகும். ​அதேபோல ராமநாதபுரத்தில் இருந்து வரும் வாகனம் இதை விட சக்தி வாய்ந்தது என்பதால் அதனையும் வரவழைத்து உள்ளோம்.

90 அடியில் இருக்கும் குழந்தை ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது அந்தக் குழந்தை ஆக்சிஜனை ஏற்றுக் கொள்கிறதா என்று சரியாக கணிக்க முடியவில்லை. மீட்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் – அமைச்சர் விஜய பாஸ்கர்

11:27 am 
இவ்வளவு அறிவியல் வளர்ச்சியிலும் குழந்தையை மீட்க இவ்வளவு நேரம் போராடுவது இந்தியாவிற்கு அவமானம் நாசாவிற்க்கு விண்கலம் அனுப்புகிறோம். ஆனால், சுஜித் என்ற குழந்தையை மீட்க முடியாமல் இருப்பது அவமானம் – சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் மருது பாண்டியர் குருபூஜை விழாவிற்கு வந்த கருணாஸ் பேட்டி

9:56 pm
குழியில் மண் சரிவதால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
9:16 pm 

தற்போது மீட்புக் குழுவினர் மற்றும் பல்வேறு துறை சேர்ந்தவர்கள் ஆல் துழாய் உள்ள சிறுவனை மீட்கும் முயற்சியை நிறுத்தி வைத்துள்ளனர்.

நெய்வேலியிலிருந்து போர்வெல் வாகனம் வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

7:51 pm 

குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட தமிழகத்தின் பல இடங்களில் பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது

7:33 pm 

100 அடி ஆழத்திற்கு சென்ற குழந்தை

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 25 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது.

முதலில் 26 அடியில் இருந்த நிலையில், குழந்தை தற்போது படிப்படியாக கீழே இறங்கி 100 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது.

7:24 pm 

ஒரு பக்கம் குழி தோண்டும் பணி நடந்தாலும், வேறு வழிகளிலும் குழந்தையை மீட்கும் முயற்சி தொடர்கிறது

 

7:11 pm 

ரஜினி மிகுந்த கவலையில் உள்ளார். அவர் குழந்தை விஷயத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். இந்த செய்தியை தொடர்ந்து பார்த்து வருகிறார் – லதா ரஜினிகாந்த்

 

7:08 pm 

குழந்தையை காப்பாற்ற நேற்று துவங்கி இன்று வரை போராடி வருகிறோம். இது துயரமான தருணம். நாமெல்லாம் ஒரு சின்ன குழந்தையை காப்பாற்ற தவறிவிட்டோமோ என்று கவலையாக உள்ளது. நாம் நாசா செல்கிறோம் விண்வெளி செல்கிறோம், ஆனால், இதுபோன்ற நேரத்தில் தொழில்நுட்பத்தால் நமக்கு தோல்வி நடக்கிறது.  இதுபோன்ற சம்பவம் புதிதல்ல,  ஏன் தொடர்ந்து நடக்கிறது. இதனை சரி செய்ய வழி இருக்கிறது. மனிதன் செல்ல முடியாத நிலையில் தொழில்நுட்பம் அங்கே செல்ல வேண்டும் – லதா ரஜினிகாந்த்

 

6:45 pm 

விரைவாக குழி தோண்ட ஓ.என்.ஜி.சி.யின் ரிக் என்ற இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. குழி தோண்ட 4 முதல் 5 மணி நேரம் ஆகும் என்று தகவல்

 

6:35 pm புதிய முயற்சியில் மீட்புக்குழுவினர்

ஆழ்துளை கிணறு அருகே 1 மீட்டர் அகலத்தில் 90 அடி ஆழத்தில் நவீன எந்திரம் மூலம் புதிய குழி தோண்டப்பட உள்ளது. தீயணைப்பு வீரர்கள் குழிக்குள் இறக்கப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை.

குழிக்குள் இறங்க 3 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

6:31 pm

சுமார் 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை 80 அடியில் இருந்த நிலையில், தற்போது 85 அடிக்கு கீழே இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

6:19 pm 

5:38 pm 

தாமதமாகும் மீட்புப்பணி – சிறுவனின் உறவினர்கள் அதிருப்தி |புதிதாக சுரங்கம் போன்ற குழி தோண்டும் முயற்சியால் மீட்புப்பணி தாமதம் ஆவதால் குழந்தையின் உறவினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசின் முயற்சியால் பயனில்லை. நாங்களே மீட்டுக்கொள்கிறோம். அமைச்சர்கள், அதிகாரிகள் வருகையால் எந்த பலனும் இல்லை என்று பெற்றோர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்

4:41 pm 

ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் போன்ற குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை. என்.எல்.சி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து குழி தோண்ட முயற்சி

4:31 pm 

70 அடி ஆழத்தில் இருந்த குழந்தை தற்போது 80 அடி ஆழத்திற்கு சென்றுள்ளது.

4:10 pm 

குழந்தை சுர்ஜித்தை கயிறு கட்டி இழுக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது

3:24 pm 

திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை மீட்க உலகப் புகழ் பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது

3:16 pm 

அரை மணி நேரத்தில் குழந்தை சுர்ஜித் மீட்கப்படுவார் – மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் நம்பிக்கை

3:08 pm 

https://twitter.com/Udhaystalin/status/1188025782926331908

குழந்தை சுர்ஜித்தின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அவன் நலமுடன் மீட்கப்படவேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் கண்டறியப்பட்டு அவை மூடப்படவேண்டும். இந்தப் பணியில் அரசுக்கு ஒத்துழைக்கவேண்டியது மக்களாகிய நம் கடமை. #SaveSurjith

 

 

3:05 pm 

வேலூர், திருப்பூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில்  திறந்த நிலையில் உள்ள
ஆழ்துளை கிணறுகளை மூட  மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு

பொன்.ராதாகிருஷ்ணன்
குழந்தை சுர்ஜித் பத்திரமாக மீட்கப் பட பிரார்த்திப்போம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நடிகர் விவேக்
நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே – நடிகர் விவேக்!
மீண்டு வா சுஜித் - ஜி.வி பிரகாஷ்
மீண்டு வா சுஜித் – ஜி.வி பிரகாஷ்
 இயக்குனர் சேரன்
“அறம்” போன்ற திரைப்படங்கள் இந்த ப்ரச்னையை வலியுறுத்தியும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததை இந்நிகழ்வு காட்டுகிறது. #prayforchild – இயக்குனர் சேரன்
லட்சுமி ராமகிருஷ்ணன்
இதைப் பார்த்து தாங்க முடியவில்லை.. – லட்சுமி ராமகிருஷ்ணன்

1:58 pm 

”மனம் கனக்கிறது!” ஸ்டாலின் கண்ணீர் டிவிட்

”மனம் கனக்கிறது. சுஜித்தை எப்படியாவது உயிருடன் மீட்டாக வேண்டும்” என மனம் கலங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.

1:57 pm 
ஒன்றரை மணி நேரத்தில் மீட்போம்
ஒன்றரை மணி நேரத்தில் சிறுவன் சுர்ஜித்தை மீட்போம் பேரிடரம் மீட்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 20 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.

மாநில-தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கூட்டாக முயற்சித்து வருகின்றனர். அரக்கோணத்திலிருந்து கொண்டுவந்த அதிநவீன கருவிகளுடன் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

1:29 pm 
திருச்சி மாவட்டத்தில் இன்று மாலை வரை மழைபெய்ய வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தகவல். இரவுக்கு மேல் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளார்.

12:57 pm 

மாநில – தேசிய பேரிடர் குழுவினர் கூட்டுமுயற்சி

சிறுவன் சுர்ஜித்தை மீட்க மாநில – தேசிய பேரிடர் குழுவினர் கூட்டுமுயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிநவீன சென்சார் கருவிகள் மூலம் மீட்கும் பணி தீவிரம்.

இதையும் பாருங்க :

பிகில் – விமர்சனம்.

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன் தெரியுமா…?

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தீபாவளி வாழ்த்து

நவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் – துணை முதலமைச்சர்

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
World Tamil News
World Newspapers And sites

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …