சேரன்

சேரன் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சேரன் தன்னிடம் தவறான நோக்கத்தில் நடந்து கொண்டதாக மீரா மிதுன் குற்றச்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சி ஒரு மாதத்தைக் கடந்துள்ளது.

வனிதா வெளியேறிய பிறகு மதுமிதா, மீராவின் குரல் பிக் பாஸ் வீட்டில் ஓங்கி ஒலிக்கிறது. குறிப்பாக மீராவை பொறுத்தவரையில் சேரன் தான் அவரது ஒரே டார்கெட் என்பது போன்ற தோற்றம் உருவாக்கியுள்ளது.

தொடர்ந்து சேரனிடம் மல்லுக்கட்டும் மீரா நேற்று ஒருபடி மேலே சென்று சேரன் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில், சேரன் தன்னை தவறான எண்ணத்தில் வயிற்றில் கை வைத்துத் தள்ளினார் .

அது கை வைக்கும் இடமில்லை. அவர் என்னிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டார்.

அவர் என்னிடம் அப்படி நடந்து கொண்டது எனக்கு தவறாக நடந்தாக தோன்றியது’ என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பினார். மீராவின் குற்றச்சாட்டால் அதிர்ச்சி போன சேரன், நான் டாஸ்க்கிற்காக தான் மீராவைத் தூக்கினேன்.

தவறான நோக்கத்தில் நான் எதையும் செய்யவில்லை. எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறது.

இப்படி பொதுவெளியில் என்னை அசிங்கப்படுத்தினால் அவர்கள் எப்படி என்னை மதிப்பார்கள் என்று கூறி கதறி அழுதார்.

மேலும் உங்களுக்கு என் செயல் வலியை ஏற்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்’ என்றார். இதைப்பார்த்து ஹவுஸ்மேட்ஸ்களும் கண்ணீர் விட்டனர்.

சேரன் மீது மீரா மிதுன் வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு ஹவுஸ்மேட்ஸ் மட்டுமில்லாது ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …