வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய ஒன்பது மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
தமிழகம், புதுச்சேரியின் கடலோரப் பகுதிகள் மற்றும் சென்னையின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் புவியரசன் தெரிவித்தார்.
மீனவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை எதுவும் இல்லை என்ற அவர், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை குறைந்து, பின்னர் நவம்பர் 25 முதல் மழை மீண்டும் அதிகரிக்கும் எனவும் தகவல் தெரிவித்தார்.
இதையும் பாருங்க :