சென்னை கடற்கரைகளில் தொடர்ந்து 4-வது நாளாக நச்சுகழிவு நுரை கரை ஒதுங்கி வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக சென்னையின் மையப்பகுதியில் ஓடும் அடையாறு, கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆற்று நீருடன் கழிவுநீர் கலந்து கடலில் கலப்பதால், கடந்த 4 நாட்களாக சென்னையில் பட்டினம்பாக்கம் கடற்கரை முதல் திருவான்மியூர் வரையிலான கடற்கரையில் பனி போன்ற நுரை படர்ந்து வருகிறது.
இதையடுத்து கடந்த 29-ம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடற்கரையில் இருந்து நீர்மாதிரிகளை எடுத்து சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இது தொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல்நீரில் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படும் போது இது போன்று நுரை வெளிவருவது வழக்கமான ஒன்றுதான் என்று அங்குள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் பாருங்க :