இலங்கை

இலங்கை

தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் தீர்மானம்

தேசிய வேலைத்திட்டம்

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வினைத்திறனான பயன்பாடு தொடர்பில் தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மின்சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகம் மற்றும் இலங்கை பேண்தகு எரிசக்தி அதிகார சபை இணைந்து முன்னெடுக்கவுள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் இணைத்து கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினால் குறித்த நிறுவனத்தில் எரிசக்தியை பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது

போதை

கிரேண்பாஸ் – ஜோர்ஜ் வீதி பிரதேசத்தில் 3 ஆயிரத்து 950 ட்ரமடோல் போதை மாத்திரைகளினை கைவசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டசுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51 வயதுடையவர் என்பதுடன், கொழும்பு 12 பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

கையளிக்கப்படவுள்ள இடைக்கால அறிக்கை

இடைக்கால அறிக்கை

குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. கிடைக்க பெற்ற வாக்குமூலம் மற்றும் முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு குறித்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் லால் பனாபிட்டி தெரிவித்துள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு சியாப்தீன் …

Read More »

ஆளும் கட்சியின் தலைவர்களை சந்திக்கவுள்ள பிரதமர்

ஆளும் கட்சியின்

எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ இன்றையதினம் பிரதமர் தலைமையிலான ஆளும் கட்சியின் தலைவர்களை சந்திக்கவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு மக்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

முஸ்லீம் அமைச்சர்கள், ஆளுனர்களை டிஸ்மிஸ் செய்ய போராட்டம்

முஸ்லீம் அமைச்சர்கள்

முஸ்லீம் அமைச்சர்களையும் ஆளுனர்களையும் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று புத்தமத பிக்குகள் உண்ணாவிரத போராட்டத்தை மூன்றாவது நாளாக நடத்தி வருகின்றனர். நல்லவேளையாக இந்த உண்ணாவிரதம் இந்தியாவில் நடக்கவில்லை. இது நடந்தது இலங்கையில் என்பது குறிப்பிடத்தக்கது இலங்கையில் முஸ்லிம் அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்கள் அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா ஆகியோர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று புத்தமத பிக்குவும், இலங்கை நாடாளுமன்றத்தின் எம்.பி.யுமான அத்துரலிய ரத்ன தேரர் என்பவர் …

Read More »

தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்

தேவையற்ற அச்சத்தை

நெற் பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி பரவிச்செல்லும் படைப்புழு தொடர்பில், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என விவசாயத் திணைக்களம் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் அநுர விஜேதுங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சில மாதங்களுக்கு முன்னர் படைபுழுவின் தாக்கம் பாரிய அளவில் காணப்பட்டது. எனினும் தற்போது, நெற் பயிர்களுக்கு படைபுழுவை ஒத்த புதிய வகை பீடைகளால் பாதிப்பு …

Read More »

உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் பலி

உந்துருளி

கிளிநொச்சி – முருகன்டி பிரதேசத்தில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அதிவேகத்தில் பயணித்துள்ள உந்துருளி பேருந்து ஒன்றுடன் மோதுண்டு நேற்றைய தினம் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மாங்குளம் காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Read More »

ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி செய்தி..!

ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி செய்தி

சுதந்திரத்தை பெற்றுக்கொண்டபோதும் பொருளாதார சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள முடியாதிருப்பது, அரசாங்கதில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் காரணமாகவே என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மக்களை பிழையாக வழிநடத்தி சில ஊடகங்கள் மேற்கொண்டுவரும் போலிப் பிரச்சாரங்கள் குறித்து கவலை அடைவதாகவும் …

Read More »

கடவுச்சீட்டு கட்டணத்தில் இன்று முதல் மாற்றங்கள்

கடவுச்சீட்டு

கடவுச்சீட்டுக்காக அறவிடப்படும் கட்டணத்தில் இன்று முதல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. குடிவரவு குடியகழ்வு திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, பொதுவான கடவுச்சீட்டுக்கான கட்டணம் 3000 ரூபாவில் இருந்து 3500 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. ஒரு நாள் சேவையில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணம் ரூபா 10,000 இல் இருந்து 15,000 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது. 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம் ரூபா 2000 இல் இருந்து ரூபா 2500 ஆக அதிகரிக்கப்படுகின்றது. ஒரே …

Read More »

பலாலி வானூர்தி நிலையத்தை விரைவில் அபிவிருத்தி செய்ய வேண்டும்

பலாலி

புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வருவதற்காக, பலாலி வானூர்தி நிலையத்தை மிக விரைவில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து, விமானப் பயணங்களை மேற்கொள்வதன் ஊடாக இலங்கைக்கு அந்நிய செலாவணியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.

Read More »