இலங்கை

இலங்கை

பாடசாலை பாதுகாப்பிற்காக பெற்றோரை பயன்படுத்த வேண்டாம்

பாடசாலை

பாடசாலைகளில் இடம்பெறும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களில் பெற்றோர்களை பயன்படுத்த வேண்டாம் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் பாடசாலைகளில் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டாலும், நாட்டின் பாதுகாப்பு, சிறந்த நிலையில் காணப்படுவதால் பெற்றோர்களை அதில் பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரால் அனைத்து மாகாண கல்வி செயலாளர்களுக்கும், மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட …

Read More »

அமைச்சரவை கூட்டம் 18 ஆம் திகதி

அமைச்சரவை கூட்டம் 18 ஆம் திகதி

எதிர்வரும் 18 ஆம் திகதி அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. அமைச்சர் மனோ கணேஷன் இதனை தெரிவித்துள்ளார். வழமையாக அமைச்சரவை கூட்டம் செவ்வாய்கிழமைகளில் இடம்பெறும். எனினும் கடந்த 11 ஆம் திகதி அமைச்சரவை கூட்டம் இடம்பெறவில்லை. உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தம்மை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுமானால் தாம் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் …

Read More »

குற்றப்பத்திரத்தை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திக்கு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீதான குற்றப்பத்திரத்தை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துள்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கையில் பெரும்பாலான நீதித்துறை சார்ந்தவர்கள் மோசடி தொடர்புடையவர்கள் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டு நீதிதுறையை அவமதிப்புக்குள்ளாக்கினார் என அவர் மீது குற்றம் …

Read More »

ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகள் பிரதமருடன் சந்திப்பு

பயங்கரவாத அபாயம்

இலங்கையில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் ராஜதந்திரிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். இதன்போது நடப்பு அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளில் இருந்து மீண்டும் வழமைக்கு திருப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆரயப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை , பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக சிங்கப்பூர் நோக்கி இன்று மதியம் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

வெடிகுண்டு தாக்குதல்…சிதறுண்ட தலை , கால் பாகம் கண்டுபிடிப்பு .. பரபரப்பு தகவல்

வெடிகுண்டு தாக்குதல்

இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குலில் வெடித்துச்சிதறிய தலை மற்றும் உட்ல் பாகங்கள் தற்கொலைதாரியான முகமது ஆசாத்துடையது என்று மரபணு சோதனையில் தெரியவந்துள்ளது. கடந்த 21 ஆம் தேதி இலங்கையில் நடைபெற்ற தற்கொலைன்குண்டு தாக்குதலில் அயல் வீட்டின் கூரையின் மேலிருந்து எடுக்கப்பட தலை மற்றும் உடலில் இருந்து துண்டான இரண்டு கால்களுடனான பாகங்கள், என தேவலாயத்தின் கூரையில் இருந்து எடுக்கப்பட்டன. இந்த பாகங்கள் எல்லாம் இறந்தவர்களின் உறவினர்களிடம் …

Read More »

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்கா சட்ட நடவடிக்கை?

அமெரிக்கா

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அமெரிக்காவும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க பிரஜைகள் சிலரும் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் குறித்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்தப் பின்னர், அமெரிக்கா தமது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலை சூத்திர குழு இன்று கூடுகிறது

Read More »

எரிபொருள் விலை சூத்திர குழு இன்று கூடுகிறது

எரிபொருள்

எரிபொருள் விலை சீராக்கல் தொடர்பாக தீர்மானிப்பதற்காக, விலை சூத்திர குழு இன்று ஒன்றுகூடவுள்ளது. நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவரது தகவல் பிரகாரம், இன்று மாலை 6 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. விலை சூத்திரத்துக்கு அமைய மாதாந்தம் 10ம் திகதி எரிபொருள் விலை புதுப்பிக்கப்படும். கடந்த மாதம் 10ம் திகதி மேற்கொள்ளப்பட்ட சீராக்கலின் படி, ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, லீற்றர் …

Read More »

ஒரு முஸ்லீம் பிரபாகரன் உருவாகிவிடுவார்: அதிபர் எச்சரிக்கை

ஜனாதிபதி

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு பின் இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள் அடித்து நொறுக்கப்படுவதும் ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பது பெரும் கவலையளிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது இந்த நிலையில் இன்று முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற இலங்கை அதிபர் சிறிசேனா, அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, …

Read More »

இன, முரண்பாட்டை ஏற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது

முரண்பாட்டை

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் வுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இதன் போது, முஸ்லிம் மக்கள் முதலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இனவாதத்தை ஏற்படுத்த ஒருவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் முஸ்லிம் மக்களின் பிரதிபலிப்புக்கள் மற்றும் அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தைக் …

Read More »

அடுத்த வாரம் முதல் அதிரடி சட்டம்..

அடுத்த வாரம்

ஆறு வீதி விதிமீறல்களுக்காக ஆகக் குறைந்த அபராதத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, வாகன போக்குவரத்து சட்டத் திருத்தங்கள் அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். வாகனங்களை செலுத்தும் சாரதிகளினால் இழைக்கப்படும் வீதி விதிமீறல்களுக்கு இதுவரை அறவிடப்பட்ட அபராதத்தை அதிகரிப்பதற்கான வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு …

Read More »