கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அதவாது 2009 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளும் ஈழத்தின் பால் துடித்தது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் ராஜதந்திரத்தால் விடுதலைப் புலிகளின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது. அப்போது இலங்கை சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்தப் படுகொலைக்கு அப்போது இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் உதவியாக இருந்தது …
Read More »இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பு வெளிநடப்பு
ஜெனீவாவில் இலங்கை குறித்த உபகுழுக் கூட்டத்திலிருந்து இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பு வெளிநடப்புச் செய்துள்ளது. சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்தக் குழுவினர் இடைநடுவில் வெளிநடப்புச் செய்தனர். ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டம் நடைபெற்றது. பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்த இலங்கை …
Read More »ஜெனீவா அறிக்கைக்கு இணங்கியமை தேசத்துரோக செயற்பாடு – ஜி.எல்.பீரிஸ்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கைக்கு அரசாங்கம் இணக்கப்பாடு தெரிவித்துள்ளது. இவ்வாறு இணக்கப்பாடு தெரிவித்துள்ளமையானது தேசதுரோக செயற்பாடாகும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மனித உரிமை பேரவையில் இராணுவத்தினருக்கு எதிரான செயற்பாடுகள் இன்று தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயத்தை அரசாங்கம் இரண்டு தரப்பினரூடாக அணுகுகின்றது …
Read More »இலங்கையில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு
மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 3.55-தாக சிறிய நில அதிர்வே பதிவாகியள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார். இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹாலி-எல, பசறை, ஹல்துமுல்ல உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை எந்தவிதமான சேதங்களும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். …
Read More »