பலவீனமடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு புத்துயிர் அளிக்கவே ஜேவிபியினால் அரசாங்கத்திற்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கொண்டு வரப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தடவையும் ஐக்கிய தேசிய கட்சி பலமடைந்து செல்கின்ற போது, அந்த கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கான வேளைகளை ஜேவிபியே மேற்கொண்டு வருகிறது. அந்தவகையிலேயே …
Read More »பிரதமர் ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு
பிரதமர் ரணில் விக்ரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்தது. கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஷர்மிளா கோணவல இதனைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த முறை பரிசீலிக்கப்பட்ட போது, அதற்கு அடிப்படை எதிர்ப்பை வெளிப்படுத்திய பிரதமர் தரப்பு சட்டத்தரணிகள், இந்த மனுவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான மூலாதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்பதால், இது குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் …
Read More »பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் சற்றுமுன்னர் அதிரடியாக கைது
ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுதாரிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் இன்று (திங்கட்கிழமை) அம்பாறை – கல்முனையில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுடனும் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இவர்கள் புலனாய்வுப் பிரிவுகளால் கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். எனவே …
Read More »பயங்கரவாதிகளின் மேலும் ஒரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொர்புடைய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு முகாம் குருநாகல் – அலகோலதெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு தெங்கு காணியொன்றில் இவ்வாறு அவர்கள் பயிற்சி முகாமை நடத்தி சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல்… இதுவரை 89 பேர் கைது
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 69 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலும், மேலும் 20 பேர் பயங்கரவாத விசாரணை பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும் இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறை ஊடகப் …
Read More »தீவிர பாதுகாப்பிற்குள் கண்ணகி அம்மன் உற்சவம்! !
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உற்சவம் இன்று நடைபெறும் நிலையில் சுமார் ஆயிரம் வரையான பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை இராணுவத்தினரும் ஆலயத்திற்குள்நுழையக்கூடிய அனைத்து பாதைகளிலும் ஆலயத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்ட்ருக்குள் சுமார் 3 இடங்களுக்கு குறையாது வீதி தடைகளை ஏற்படுத்தி சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளதோடு ஆலய வளாகத்தை சூழவும் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு ஆலய …
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நாளையுடன் ஒரு மாதம்…!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நாளையுடன் ஒரு மாதம் பூர்தியாகின்றது. இதனை முன்னிட்டு நாளை வடமாகாணத்தில் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அதற்கமைய காலை 8.45 அளவில் வழிப்பாட்டுத் தளங்களின் மணியோசை ஒலிக்கச் செய்து அஞ்சலி செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More »நாட்டின் நிலைமையை கண்டு மனவருத்தம் அடைவதாக மகிந்த தெரிவிப்பு
அமைதியான நாட்டை தாம் தற்போதைய அரசாங்கத்திடம் கையளித்திருந்தாலும், தற்போது நாட்டின் நிலைமையை கண்டு மனவருத்தம் அடைவதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய படையினர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில் இந்த விடயத்தை கூறியுள்ளார். தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தமக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள், தற்போதைய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அவர்களும் பொறுப்பாளிகள் என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
Read More »இந்திய படையினரால் வெல்ல முடியாத விடுதலைப் புலிகளை இலங்கை படையினர் வென்றனர் – ஜனாதிபதி
30 வருட யுத்தத்தைக் காட்டிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்ட தற்போதைய பயங்கரவாத நிலைமையை அழிப்பதற்கான முக்கியப் பொறுப்பு, நாட்டின் புலனாய்வு நிபுணர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய படையினர் தின நிகழ்வு இன்றையதினம் நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இதில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையானது நீண்டகால யுத்தத்துக்கு பழகிய நாடாகும். 30 வருடங்களாக உள்நாட்டு யுத்தத்தில் இராணுவம் வெற்றிக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா தமது படையினரை …
Read More »விசேட தகவல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க தீர்மானம்
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும், உள்நாட்டவர்களையும் உரிய முறையில் அடையாளம் காண்பதற்காக விசேட தகவல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் தகவல்கள் மற்றும் அவர்களின் சுற்றுலா என்பன தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது. இது தொடர்பான குழு தற்போது நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார். இலங்கையில் …
Read More »