தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் பிரம்மாண்டமாக வந்து தனது வேட்பு மனுவினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது சொத்து மதிப்பு மற்றும் தன் மீதான வழக்கு விவரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து மனுவில் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி ரவீந்திரநாத் குமாரின் சொத்து மதிப்பு விவரம் இதோ.. …
Read More »சிவகங்கையில் களமிறங்கிய சௌகிதார் எச்.ராஜா
சௌகிதார் எச்.ராஜா சிவகங்கையில் போட்டியிடுவதை முன்னிட்டு பாஜகவிற்கு எதிராக போட்டியிடும் கட்சிகள் டெபாசிட்டையாவது பெற வேண்டும் என முயற்சித்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் தூத்துகுடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை மற்றும் சிவகங்கை என ஐந்து தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலை முறையாக கட்சி தலைமை அறிவிப்பதற்குள்ளேயே ஹெச்.ராஜா அதனை வெளியிட்டார். பின்னர் அது யூகங்களின் அடிப்படையிலான பட்டியலே என கூறி சமாளித்தார். இந்நிலையில் பாஜக மேலிடம் …
Read More »டிடிவி தினகரன் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளிய்யி வருகின்றன. ஏற்கனவே அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. பாமக வும் வெளியிட்டது. இந்நிலையில் தற்போது அமமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இது சட்ட மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகிய இரு தேர்தலுக்கும் தனித்தனியே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் …
Read More »பாசிச பாஜக இல்ல, பாசமான பாஜக: தூத்துக்குடியில் தமிழிசை
தூத்துக்குடி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள தமிழிசை பாஜக கட்சியானது பாசிச பாஜக இல்லை, பாசமான பாஜக என கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் தூத்துகுடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை மற்றும் சிவகங்கை என ஐந்து தொகுதிகளை பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. அதன்படி தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சிபி. ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்தரன் ஆகியோர் …
Read More »உதயசூரியனில் போட்டியில்லை – வைகோ திட்டவட்டம்!
திமுக தொகுதியில் ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனிச்சின்னத்தில்தான் போட்டி என வைகோ அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இடபெறுள்ள மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதிமுக மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிட இருக்கிறார். கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி 2009ல் ஈரோடு எம்.பியாக தேர்ந்த்டுக்கப்பட்டது …
Read More »ஆண்களுக்கு10 லிட்டர் பிராந்தி, பெண்களுக்கு 10 பவுன் நகை
திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் வாக்குறுதிகளை ஏகபோகமாக அள்ளி வீசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் சில கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. நேற்று திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்யவும் பிரச்சாரத்திற்காகவும் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திருப்பூர் மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் அந்தியூரை சேர்ந்தவர் சேக் …
Read More »