பாராளுமன்ற தேர்தல் 2019

பாராளுமன்ற தேர்தல் 2019

பிரபல நடிகைக்கு ஆதரவு தெரிவித்து ரஜினிகாந்த் பிரச்சாரமா?

ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஏற்கனவே அறிவித்தார். ஆனால், போட்டியில்லை என்றால் என்ன பிரச்சாரம் செய்வோம் என பிரபல நடிகைக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யயுள்ளதாக செய்திகள் வெளியாகின. மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதே தொகுதியில் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். ஏற்கனவே, …

Read More »

குக்கர் சின்னத்திற்கு கடும் போட்டி! தினகரனுக்கு சிக்கலா?

குக்கர்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அந்த தொகுதியில் குக்கர் சின்னத்தை ஒருசில நாட்களில் பிரபலப்படுத்தினார். இதனால் தான் வரும் மக்களவை தேர்தலிலும் குக்கர் சின்னத்தை தனது கட்சிக்கு ஒதுக்குமாறு அவர் தேர்தல் ஆணையத்தில் கேட்டிருந்தார். ஆனால் தேர்தல் ஆணையமும், சுப்ரீம் கோர்ட்டும் அவருக்கு குக்கர் சின்னத்தை தர மறுத்தன இந்த நிலையில் ஆர்.கே.நகரில் புகழ்பெற்ற குக்கர் சின்னம் தமிழகம் முழுவதும் புகழ்பெற்றுவிட்டது. எனவே தமிழகத்தில் போட்டியிட்டுள்ள …

Read More »

தமிழிசை வேட்புமனு நிராகரிக்கப்படுமா? திமுக எதிர்ப்பால் பரபரப்பு!

தமிழிசை

தூத்துகுடி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திராஜன் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என திமுக தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளதை தமிழிசை தெரிவிக்கவில்லை என்றும், அதனால் தூத்துக்குடியில் பாஜக வேட்பாளர் தமிழிசை வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்றும் திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுக தரப்பின் கடும் எதிர்ப்பு காரணமாக தமிழிசையின் வேட்பு …

Read More »

கமல் பங்கேற்ற கூட்டத்திற்கு திடீர் தடை பறக்கும்படை!

கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவுள்ளார். அதில் அவர் போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று கோவையில் மாலை ஆறு மணிக்கு நடைபெறும் கட்சிக்கூட்டம் ஒன்றில் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது இந்த நிலையில் அதற்கு முன்னரே கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கமலஹாசன் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு …

Read More »

தேனியின் தோனியா ஓபிஎஸ் மகன்? மீம்ஸ்கள்

ரவீந்திரகுமார்

தமிழகத்தின் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாக தேனி தொகுதி மாறியுள்ளது. துணண முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரகுமார் போட்டியிடுவதால் முதலில் முக்கியமான தொகுதியாக இருந்த தேனி, அமமுகவில் தங்கதமிழ்செல்வனும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது திமுக-காங்கிரஸ் என்ற வலுவான கூட்டணியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தாலும் இந்த தொகுதிக்கு இவர் அறிமுகமில்லாதவர் என்பதால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. …

Read More »

உதயசூரியனில் மதிமுக வேட்பாளர்!

தமிழகத்தில்

தமிழகத்தில் சுமார் 20 வருடங்கள் அரசியல் கட்சி நடத்தி வரும் வைகோ, திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதிக்கு ஒப்புக்கொண்டது குறித்து மதிமுகவினர்களே விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக வைகோ அறிவித்திருந்தார் இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். ஒருசில மாவட்டங்களில் மட்டுமே …

Read More »

தேமுதிக வேட்பாளர் சுதீஷின் சொத்து மதிப்பு

சுதீஷ்

அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளில் கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலின் போது சுதீஷின் சொத்து மதிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதவாது, கடந்த 5 ஆண்டுகளில் சுதீஷின் அசையும் சொத்துகளின் மதிப்பு 336% வரை அதிகரித்துள்ளது. அதேபோல் மொத்த சொத்து 77% அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் சேலம் மக்களவை தேர்தலில் தேமுதிக …

Read More »

அவ்வளவுதானா உங்க பவர்; பூசி மொழிகிய தமிழிசை

தமிழிசை

அடுத்த மாதம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. பிரச்சாரத்தையும் தீவிரவாகமாக துவங்கியுள்ளது. பாஜக தலைமை மார்ச் 21 முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஆனால், இதற்கு முன்னரே எச்.ராஜாவும், வானதி சீனிவாசனும் இதர்கு முன்னரே வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டனர். இது பாஜகவினர் மத்தியில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் தமிழிசை எச்.ராஜா மீது கடும் கோபத்தில் இருந்தார் எனவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் …

Read More »

கரூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிரடி !

கரூர்

கரூர் மாவட்டம் குளித்தலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான நிலையாக நின்று சோதனை செய்யும் குழுவினர் குளித்தலை அருகே சிவாயம் பிரிவு ரோடு பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ராமநாதபுரத்திலிருந்து நாமக்கல் நோக்கி சென்ற வேனில் சோதனையிட்டனர். அப்போது வாளவந்தியை சேர்ந்த டிரைவர் குமார் என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த ரூ.3,35,000 பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குளித்தலை சட்டமன்றத்தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.எம்.லியாத் …

Read More »

வேட்புமனுத்தாக்கல் செய்தார் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ்

பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட இருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தோழி கௌரி லங்கேஷை இந்துத்வாவாதி ஒருவர் சுட்டுக்கொன்றதில் இருந்து தீவிரமாக அரசியல் பேசி வருகிறார். அதிலும் பாஜக வையும் இந்துத்வா அரசியலையும் சங்பரிவார் அமைப்புகளையும் எதிர்த்து பல்வேறு அரசியல் கூட்டங்களில் கடுமையாகப் பேசி வருகிறார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த மாணவர் அமைப்புப் போராட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். இதனால் …

Read More »