திமுக வாரிசுகள் மக்களவை தேர்தலில் சென்னையை திமுகவின் வெற்றி கோட்டையாக மாற்றியுள்ளது. தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும் வட சென்னையில் கலாநிதி வீராசாமியும் போட்டியிட்டனர். இவர்கள் மூவரும் முன்னிலையில் உள்ளனர். தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியன், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி, மாறனின் மகன் தயாநிதி மாறன் என திமுக தலைவர்களின் வாரிசுகள் முன்னிலை பெற்று சென்னையை திமுகவின் வெற்றி கோட்டையாக மாற்றியுள்ளனர். …
Read More »நீங்கள் சாதித்து விட்டீர்கள் – மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினி !
மக்களவைத் தேர்தலில் பெரும்பாண்மை பெற்று முன்னிலை வகிக்கும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடிக்கு ரஜினி வாழ்த்துக் கூறியிருக்கிறார். மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக 347 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. உறுதியான முடிவுகள் தெரியவர மாலை ஆகலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் பாஜகவின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இம்முறையும் பாஜகவின் பிரதமராக மோடியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மோடிக்கும் பாஜகவுக்கும் மோடிக்கும் …
Read More »வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறை ஏற்படாமல் தடுக்கவேண்டும் – உள்துறை அமைச்சகம்
நாளை வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வாக்கு …
Read More »சிவகங்கை மக்களவைத் தேர்தல் 2019
முக்கிய வேட்பாளர்கள்: எச்.ராஜா (பாஜக)- கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் சிவகங்கை தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி சார்பில் எச்.ராஜா (பாரதிய ஜனதா கட்சி ), திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி சார்பில் கார்த்தி சிதம்பரம் (இந்திய தேசிய காங்கிரஸ் )போட்டிடுவதால் இத்தொகுதியின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் 73 சதவீத மக்கள் வாக்களித்தனர். …
Read More »விழுப்புரம் மக்களவை தேர்தல் 2019
முக்கிய வேட்பாளர்கள் :- வடிவேலு இராவணன் ( பாட்டாளி மக்கள் கட்சி) vs ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி ) விழுப்புரம் தொகுதியானது தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 77% மக்கள் வாக்களித்தனர். மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 18,77,835, இதில் வாக்காளர்கள் 14,27,874 உள்ளனர். ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,14,211, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,13,480. தற்போதைய தேர்தலில் …
Read More »தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகளில் 71.87 சதவீத வாக்குப்பதிவு
தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்றத் தொகுதிகளில் 71.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #LokSabhaElections2019 #TNElections #VoterTurnout தமிழகத்தில் நேற்று 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றம் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்ட பகுதிகளிலும், …
Read More »“வாக்களிக்க முடியாமல்போனது சிம்புக்கு வருத்தம்” – டி.ராஜேந்தர்
மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுமக்களும், பிரபலங்களும் காலை முதலே ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். வாக்கு இயந்திர கோளாறு, சிறுசிறு வன்முறைகள் எனப் பல இடங்களில் பரபரப்பு காணப்பட்டது. இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் வாக்களித்தார். பின்னர் …
Read More »தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குப்பதிவு
தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல்லில் அதிகபட்சமாக 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElections2019 #VoterTurnout தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பின் …
Read More »தமிழகத்தில் 5 மணி வரை 63.73 சதவீத வாக்குப்பதிவு – சட்டமன்ற இடைத்தேர்தலில் 67.08 சதவீதம்
தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElections2019 #VoterTurnout தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி 30.62 சதவீத …
Read More »5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் என்ன?
வாக்குப்பதிவு முடிய இன்னும் ஒரு மணி நேரம் உள்ள நிலையில் தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விஐபிக்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3 மணி நிலவரப்படி 50.02 சதவீதமும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை 3 …
Read More »