ஜனாதிபதித் தேர்தல்

சற்றுநேரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் உத்தியோகபூர்வ பட்டியில் இன்றும் சிறிது நேரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் அறிவிக்கப்படவுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கையானது தற்போது நிறைவடைந்துள்ளதுள்ள நிலையில் குறித்த வேட்புமனுக்களை தாக்கல் செய்தவர்கள் மீது எதிர்ப்பை தெரிவிக்கும் காலமும் நிறைவடைந்துள்ளது.

அரச ஊழியர்கள் இன்றிலிருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதுடன் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து போலியான பிரசாரங்கள் மற்றும் தூற்றும் வகையிலான செய்திகளை ஊடகங்கள் வெளியிட கூடாதெனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் தேர்தல் சட்டங்களை மதித்து பொறுப்புடன் அனைத்து வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் தேர்தல் சட்டங்களை மீறுபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொலிசாருக்கு விசேட அதிகாரம் உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கையானது தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தமாக கட்டுப் பணம் செலுத்தப்பட்ட 41 வேட்பாளர்களில் 35 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன் சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம ஆகியோர் தம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லையென தேர்தல்கள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் லீக்கான ‘தளபதி 64’ ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ!

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …