இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய இரத்தம் இன்றி மருத்துவர்கள் திண்டாடினார்கள்,இதனையடுத்து நாட்டில் உள்ள அனைவரும் ரத்ததானம் வழங்கி உதவுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து,
யாழ்ப்பாணப்போதனா வைத்தியசாலையில் குருதி வழங்குவதற்குக் குருதிக் கொடையாளர்கள் நுற்றுக்கணக்கில் குவிந்து வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயம் அடைந்தோரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி சேகரிக்கப்படுகிறது. கொழும்பு நாரஹன்பிட்டியில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டால் உடனடியாக வழங்குவதற்கு ஏற்றவகையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தயாராகியுள்ளது.
குருதிக் கொடையாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் குருதி வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இரத்தம் வழங்கக் கொடையாளர்கள் குவிந்து வருகின்றனர்.