தொடங்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி! முதல் போட்டியாளர் யார் தெரியுமா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த் ‘பிக்பாஸ் 3’ நிகழ்ச்சி சற்றுமுன் தொடங்கியது. முதல் போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கமல்ஹாசன் தனது வீட்டின் கதையை சில நிமிடங்கள் கூறிவிட்டு பின்னர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார்.

நாம் ஏற்கனவே கேள்விப்பட்டவாறு கலைநயத்துடன் அமைக்கப்பட்டிருந்த பிக்பாஸ் வீடு வண்ணமயமாக இருந்தது.

இந்த வீட்டில் ‘பேட்ட’ ரஜினியின் ஓவியம் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதுமட்டும் மிஸ்ஸிங். தகவல் தவறா? அல்லது ரஜினியின் ஓவியம் அகற்றப்பட்டதா? என்பது தெரியவில்லை

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளராக செய்தி வாசிப்பாளரும், தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையுமான ஃபாத்திமா பாபு உள்ளே நுழைந்தார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த கமல் அவரை வரவேற்றார். இருவரும் சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்த பின்னர் ஃபாத்திமா பாபுவிடம் விடை பெற்று சென்றார் கமல்ஹாசன்.

இரண்டாவது போட்டியாளராக இலங்கை தமிழ்ப்பெண் லாஸ்லியா என்பவர் பிக்பாஸ் வீட்டினுள் உள்ளே நுழைந்துள்ளார்.

இனி அடுத்தடுத்து 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழையவுள்ளனர். அவர்கள் யார் யாரென அவ்வப்போது அப்டேட் செய்வோம்

தமிழ்நாட்டு சிக்கல்களை எடுத்துரைக்கும் பிக்பாஸ் வீடு

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …