பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் சரவணனை வெளியேற்றுங்கள் என்று நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், அனல் கிளப்பும் சண்டையில் ஈடுபட்டு பிக் பாஸ் வீட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
வனிதாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாக இரண்டாவது வாரத்திலேயே வனிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
ஆனால் வனிதா விஜயகுமாரை ரசிகர்கள் பலரும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் எதிர்பார்த்து வருகின்றனர்.
காரணம் வனிதா இருந்தால் அங்கு கூச்சலுக்கும் சரி களேபரத்துக்கும் சரி எந்த பஞ்சமும் இருக்காது.
Disgraceful ! Vote him out tweeple he doesn’t deserve to be on the show! What do you call this ignorance ?
“Many call out actor Sarvanan after he admits to groping women on buses on Bigg Boss” https://t.co/rs1piWM3ww
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 29, 2019
பலமுறை நியாயமாகப் பேசி இருந்தாலும், அவர் மட்டுமே பேச வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் மேலோங்கி இருந்ததாகத் தான் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத வனிதா, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் சரவணன் பேருந்தில் பெண்களை உரசியிருக்கிறேன் என்று கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள வனிதா, அனைவரும் சரவணனுக்கு வாக்களித்து அவரை வெளியில் அனுப்புங்கள்.
அவர் இந்த நிகழ்ச்சிக்கு அருகதை இல்லாதவர். பலர் கூறி நான் கேள்விப்பட்டேன், அவர் பேருந்தில் பெண்களை உரசுபவர் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்’ என்று பதிவிட்டுள்ளார்.
சரவணனின் இந்த சர்ச்சை பேச்சுக்கு நேற்றைய போட்டியில் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.