தர்ஷன்

விஜய் அம்மாவைச் சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருவர் விஜய்யின் தாயாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. இந்த சீசனுக்கான டைட்டிலை முகென் ராவ் பெற்றார்.

இரண்டாம் இடத்தை சாண்டியும், மூன்றாம் இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். ஆனால் இதுவரை நடந்த சீசனில் அதிகம் நட்பு பாராட்டப்பட்டது இந்த சீசன் தான். ஒவ்வொருவரின் வெற்றியையும் சக போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
அபிராமி
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் ஒவ்வொருவரும் சக போட்டியாளர்களின் இல்லங்களுக்குச் சென்று நட்பு பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தர்ஷனும், அபிராமியும் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகரை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தங்களது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்களும், பிக்பாஸ் ரசிகர்களும் சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

https://www.instagram.com/p/B3hiO6PBXXh/?utm_source=ig_web_copy_link

இன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …