சாண்டி

“நீ இந்த வீட்ல இல்லனாலும் என் மனசுல இருக்கடா…” கவினுக்காக உருகும் சாண்டி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 96-வது நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் குறித்து சாண்டி மனம் உருகி பேசும் வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து 100 நாட்களுக்கு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறார்.

அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் இத்தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு முதலாவதாக எழுந்த கவின் நான் இந்த தொகையை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்து நேற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

கவினை பிரிந்த லாஸ்லியாவும் சாண்டியும் பிக்பாஸ் வீட்டில் மகிழ்ச்சி இழந்து காணப்பட்டனர். இந்நிலையில் 96-வது நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

அதில், கவினை பிரிந்த சாண்டி நீ இந்த வீட்டில் இல்லை என்றாலும் என் மனசுல இருக்க என்று தெரிவித்தார். பின்னர் இறுதிச்சுற்றிற்கு செல்லும் போது கவினின் மெடலை எடுத்துச் செல்வேன் என்றும் சாண்டி தெரிவித்துள்ளார்.

ஷெரின் எழுதிய காதல் கடிதம் யாருக்கு? 3 பேர் மீது சந்தேகம்!

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …