‘பிக்பாஸ் 3’ இறுதி நாள் கொண்டாட்டத்தில் கவினுக்கு கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 105 நாட்களுடன் நேற்று முடிவடைந்தது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 100 நாட்களைக் கடந்து ஷெரின், சாண்டி, முகென், லாஸ்லியா ஆகிய 4 பேர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வாகினர்.
இவர்களில் இறுதிச்சுற்றுக்குச் செல்லும் டிக்கெட்டைப் பெற்ற முகென் பிக்பாஸ் டைட்டிலைப் பெற்று வின்னராக அறிவிக்கப்பட்டார்.
நடன இயக்குநர் சாண்டி இரண்டாவது இடத்தையும், லாஸ்லியா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இதனிடையே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில போட்டியாளர்களுக்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டன.
அதில், சேரனுக்கு ஒழுக்கமானவர்(Discipline), ஷெரினுக்கு நட்பில் சிறந்தவர் (best buddy) தர்ஷனுக்கு ஆல் ரவுண்டர், வனிதாவுக்கு தைரியம் நிறைந்தவர் என்ற விருதுகள் வழங்கப்பட்டன.
கவினுக்கு கேம் சேஞ்சர் என்ற விருது வழங்கப்பட்டது. அதேவேளையில் அவரது ஆர்மியினர் சமூகவலைதளங்களிலும் ஹேஸ்டேக் உருவாக்கி கொண்டாடினர்.
கமல்ஹாசன் பேசும்போதும், கவின் உள்ளே இருந்திருந்தால் ரிசல்ட் வேறுமாதிரி இருந்திருக்கும் என்று பேசினார்.