சரவணன்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சரவணன் அளித்த முதல் பேட்டி.! ரசிகர்களுக்கு சரவணன் சொன்ன பதில்.!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் அதிரடியாக வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெண்கள் குறித்து சர்ச்சையான விஷங்களை பேசியதால் சரவணன் மீது சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தன.

இதனால் சரவணனை பகிரங்க மன்னிப்பு கேட்க சொன்னதால் சரவணனும் மன்னிப்பு கேட்டார்.

இருப்பினும் அவர் மன்னிப்பு கேட்ட சில நாட்கள் கழித்து சரவணன் பேசிய சர்ச்சை கருத்தால் பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணனை வெளியேற்றினர்.

இதனால் ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை பிக் பாஸ் மீது வைத்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சரவணன் எந்த பேட்டியிலும் பங்குபெறவில்லை.

இருப்பினும் சமீபத்தில் சரவணனுக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

அப்போது எடுத்துக்கொண்ட சரவணனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முதன் முறையாக சரவணன் பிரபல தனியார் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் சரவணனிடம் பிக் பாஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சரவணன், இந்த 40 நாட்களில் நமது வாழ்க்கையில் இத்தனை மாற்றங்களா என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

சமீபத்தில் நான் அத்தி வரதர் கோயிலுக்கு சென்றேன் அப்போது அங்கு இருந்த ஒரு லட்சம் பேரில் 80 ஆயிரம் பேர் என்னை திரும்பி பார்த்தனர்.

அதை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை. எனக்கு இப்போது ரசிங்கர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

என்னை புரிந்து கொண்டு எனக்காக பாலோவெர்ஸ்சாக மாறிய அனைவர்க்கும் நன்றி என்று கூறியுள்ளார் சரவணன்.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …