பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 போட்டியாளர்கள் மீதமுள்ள நிலையில் இந்த வாரம் 6 போட்டியாளர்களும் நேரடியாக நாமினேட் ஆகியுள்ளனர்.
மேலும், இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்கில் முகென் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.
ஒருவேளை முகென் இந்த சீசனின் வெற்றியாளராக வந்து விட்டால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு புதிய வரலாறாக அமையும். பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டும் இரண்டு சீசனை நிறைவு செய்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் பட்டத்தை வென்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற இறுதி டாஸ்கின் போது பலருக்கும் பல்வேறு விதமான காயங்கள் ஏற்பட்டு இருந்தது. அதே போல முகெனுக்கு உடம்பில் சில காயங்கள் ஏற்பட்டு உள்ளது. நேற்றய நிகழ்ச்சியில் முகென் ஒரு பனியனை மட்டும் அணிந்து கொண்டு இருந்தார்.
அப்போது அவரது தோல் பட்டைகளில் சில கன்னிபோன காயங்கள் இருந்தது. ஆனால், இது நாள் வரை அவருக்கு ஏற்பட்ட இந்த காயத்தை பற்றி அவர் யாரிடமும் கூறவில்லை.
சிறு காயம் ஏற்பட்டாலே அதனை சிம்பதிக்காக பெரிதுபடுத்தி கூறும் போட்டியாளர்கள் மத்தியில், இத்தனை காயம் ஏற்பட்டும் அதனை வெளியில் சொல்லாமல் இருந்த முகெனின் குணம் பாராட்டக்கூறியதே.
அதே போல முதல் சீசனில் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் சினேகன் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். மேலும், இரண்டாவது சீசனில் ஜனனி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக நுழைந்தார். ஆனால், இவர்கள் இருவருமே பட்டத்தை வெல்லவில்லை.
எனவே, இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெரும் போட்டியாரல்கள் பிக் பாஸ் பட்டத்தை வெல்ல மாட்டார்கள் என்ற ஒரு நினைப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் முகென் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.
எனவே, முகென் பட்டத்தை வெல்வாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.