மீரா மிதுன்
மீரா மிதுன்

இரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர்தான் நடிகையும் மாடல் அழகியுமான மீராமிதுன்.

மாடல் அழகியான இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்று இருந்தார். ஆனால், அழகி பட்டத்தை வைத்துக்கொண்டு இவர் செய்த பல்வேறு மோசடி செயல்களால் அவரிடமிருந்து அழகிப் பட்டம் பறிக்கப்பட்டது.

இதனால் இவர் பங்கு பெற்ற அந்த அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த தர்ஷனனின் காதலியான சனம் ஷெட்டிக்கு இவரது அழகி பட்டம் கொடுக்கப்பட்டது.

இதோடு மட்டுமல்லாமல் மீரா மிதுன் மீது பல்வேறு பண மோசடி புகார்கள் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் மிகவும் சர்ச்சையான ஒரு நபராக இருந்து வந்தார் மீரா மிதுன்.

மேலும் இவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் திடீரென்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மீராமிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னரும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அதிலும் குறிப்பாக சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளிவிட்டார் என்று இவர் கூறிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மீராமிதுன் பிக்பாஸ் குறித்தும், பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு சரியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதேபோல சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பள பணத்தை விரைவில் கொடுக்க வேண்டும் என்று பிக் பாஸ் குழுவிற்கும், விஜய் தொலைக்காட்சிக்கு மிரட்டல் விடும் தோணியில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் மீரா மிதுன்.

மேலும், 8 தோட்டாக்கள் தானாசேர்ந்தகூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார், ஆனால், பிக்பாஸில் இவரது லட்சணத்தை கண்டு இவர் நடித்த காட்சிகளை படத்திலிருந்து நீக்கினர்.

மேலும், இவர் அருண் விஜய் நடித்துவரும் அக்னிசிறகுகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்.

இதையும் பாருங்க :இன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை

இதனால் மிகவும் விரக்தி அடைந்த மீராமிதுன் தற்போது மும்பையில் ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருவதாகவும் அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

மேலும், தற்போது மும்பையில் சுற்றித் திரிந்து வரும் மீராமிதுன் அங்கே எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

பட வாய்ப்புகள் தொடர்ந்து பறிபோவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், மீண்டும் பழைய நிலையை அடைய திருமணம் தான் சரியான வழி என்று தேர்ந்தெடுத்துள்ளார். தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க மீரா மிதுன் ஏற்கனவே திருமணமானவர் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ஒரு எபிசோடில், கணவர் குறித்து சொல்ல வேண்டும் என்று டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அப்போது தனது கணவர் குறித்து பேசிய மீரா மிதுன், ஐந்து வருடத்திற்கு முன்னர் என்னுடைய அப்பா எனக்கு ஒருவரை பார்த்து திருமணம் செய்து வைத்தார்.

அனால், திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து தான் அவன் ஒரு சைக்கோ என்று தெரிந்தது. இப்படி ஒருவரை எனக்கு திருமணம் செய்துவிட்டோமே என்று அப்பா மிகவும் சங்கடமடைந்தார்.

அந்த திருமணம் சட்டபடி பதிவு செய்யபடாததால் எனக்கு என்னுடைய அப்பா, என் கணவரை பிறந்ததும் மூன்று சாய்ஸ் கொடுத்தார். ஒன்று வெளிநாடு சென்று படி இல்லை இதை அனைத்தையும் மறந்துவிடு. இது ரெண்டும் இல்லனா உன் இஷ்டம் என்று கூறிவிட்டார்.

ஆனால், நான் என் கணவருகாக காத்திருப்பதாக சொன்னேன். ஒரு முறை என் பிறந்தநாளன்று நானே அவர் வேலை செய்யும் இடத்திற்கு சென்றேன்.

பின்னர் நான் பேசிகொண்டே இருக்கும் போது என்னை அவர் அறைந்துவிட்டார்.

அவர் அடித்தும் எனக்கு ரத்தம் வந்து விட்டது பின்னர் இரவு இரண்டு மணிக்கு அந்த இடத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு தனியாக வந்து விட்டேன்.

என் கணவர் குறித்து நான் ரொம்ப ஆசையாக இருந்தேன் ஆனால், இப்படி ஆகிவிட்டது. அந்த சம்பவத்திற்கு பின்னர் யார் மீதும் எனக்கு எந்த எண்ணமும் வரவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீரா மிதுன்

இதையும் பாருங்க :

இன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை

விரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா?

வெளியாகுமா பிகில் படம்? இன்று பிற்பகல் நீதிமன்றம் தீர்ப்பு!

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …