பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது.
இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் இனி வரும் டாஸ்க்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று போட்டியாளர்கள் அனைவரும் போராடி வருகின்றனர்.
இதுவரை பல்வேறு டாஸ்குகள் நிறைவடைந்த நிலையில் இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் சிலர் மத்தியில் சண்டைகளும் வெடித்து வருகிறது.
நேற்றய நிகழ்ச்சியில் பால் டாஸ்கின் போது லாஸ்லியாவை கீழே தள்ளி விட்டதால், சாண்டியிடம் கத்தினார் கவின்.
பின்னர் லாஸ்லியாவிற்காக போட்டியை கொஞ்சம் நேரம் நிறுத்தியதால் ஷெரின், கவினிடம் சண்டையிட்டார்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கவினுக்காக சாண்டியை விட்டு கொடுக்க சொல்லி வக்காலத்து வாங்கினார் லாஸ்லியா.
இப்படி இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கால் போட்டியாளர்கள் மத்தியில் தற்போது தான் போட்டி குணமே கொஞ்சம் எட்டி பார்த்து உள்ளது.
இந்த நிலையில் இன்றுடன் இந்த டாஸ்க் நிறைவடைய இருகிறது.
லாஸ்லியா விஷயத்தில் கவின் செய்த விஷயம்.! மனம் வருந்தி கவினிடம் புலம்பிய சாண்டி.!