நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்குமே விருது என்று அறிவிக்கப்பட்டது இந்த விருதினை சாக்ஸி மோகன் வைத்தியா அபிராமி ஆகியோர் நடுவர்களாக இருந்து வழங்கினர் மேலும் இவர்கள் மூவரும் கலந்தாலோசித்து யாருக்கு என்ன விருது வழங்க வேண்டும் என்பதையும் முடிவு செய்து கொள்ளலாம் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார்.
இதில் முதல் விருதே லாஸ்லியாவிற்கு தான் வழங்கப்பட்டது, அவருக்கு பச்சோந்தி என்ற விருது வழங்கப்பட்டது.
அதனை பெற்றுக்கொள்ள மேடைக்கு வந்த லாஸ்லியா அதனை கையில் வாங்கிக்கொண்டு இந்த விருதினை நான் வாங்க விருப்பம் இல்லை என்று சாக்ஸியின் காலடியில் தூக்கிப் போட்டு விட்டு வந்து விட்டார். இதனால் நடுவர்களாக இருந்த மூவருமே கடும் கோபம் அடைந்தார் இதனால் லாஸ்லியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மற்ற போட்டியாளர்கள் எவ்வளவு கூறியும் லாஸ்லியா அந்த விருதை வாங்க மறுத்துவிட்டார்.
அதற்கு மாறாக சாக்க்ஷி மற்றும் மோகன் வைத்தியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் லாஸ்லியா.
அப்போது வழக்கம்போல எக்ஸ்க்யூஸ் மீ, ஹலோ என்ற வார்த்தைகளை மிகவும் குரல் உயர்த்தி கத்திக் கொண்டிருந்தார் லாஸ்லியா.
இதனால் ஒரு கட்டத்தில் மோகன் வைத்தியா கடும் கோபமடைந்தார்.
வயது வித்தியாசம் பார்க்காமல் என்ன இப்படியே கத்துகிறாய் என்று மோகன் வைத்யா கேட்டதற்கு நான் அப்படித்தான் கத்துவேன் என்று கூறினார் லாஸ்.
அதன் பின்னர் மோகன் வைத்தியா பேசிக்கொண்டிருக்கையில் ஹலோ என்று லாஸ்லியா கூற மோகன் வைத்தியா மிகவும் கடுப்பானார்.
இதனால் வயதுக்கு முதலில் மரியாதை கொடு என்ன என்னையே ஹலோ என்கிறாய். விட்டால் வாடா போடா என்று கூப்பிடுவாயா என்று மோகன் வைத்தியா லாஸ்லியாவின் கேட்டார். அதற்கு நான் ஒன்னும் அப்படி கூப்பிட போவதில்லை நீங்கள் பேசியதற்கு தான் நான் பதில் அளித்தேன் நான் மரியாதையாக தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியினார்.