பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பித்த நட்பு தற்போது திருமணத்தில் முடிவடைந்துள்ளது இரண்டு போட்டியாளர்களுக்கு..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு காதல் மலர்வது வாடிக்கையாகி விட்ட ஒன்றுதான். தமிழில் பிக்பாஸ் முதல் சீசனில் நடிகர் ஆரவ் – ஓவியா இடையே காதல் ஏற்பட்டது. இரண்டாவது சீசனில் நடிகர் மஹத், யாஷிகா, மூன்றாவது சீசனில் கவின் – லாஸ்லியா என போட்டியாளர்கள் காதலித்துக் கொண்டாலும் அது திருமணத்தில் முடிந்ததில்லை.
இந்நிலையில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் கலந்து கொண்ட பிரபல இசையமைப்பாளர் சந்தன் ஷெட்டிக்கும் அதே சீசனில் பங்கேற்ற நிவேதா கவுடாவுக்கும் இடையே விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பித்த இவர்களது நட்பு காதலாக மாறியதை அடுத்து மைசூரில் இருவீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டாருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நிச்சயதார்த்தத்தை அடுத்து விரைவில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
https://www.instagram.com/p/B3RqeK7FNMR/?utm_source=ig_web_copy_link
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பித்த நட்பு காதலாக மாறி திருமணம் வரை சென்றுள்ள நிலையில் தமிழ் பிக்பாஸில் காதல் மன்னனாக வலம் வந்த கவின், தான் காதலித்த லாஸ்லியாவை கரம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
https://www.instagram.com/p/B3RqeK7FNMR/?utm_source=ig_web_copy_link
இதையும் பாருங்க :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
இன்றைய ராசிப்பலன் 22 ஜப்பசி 2019 செவ்வாய்க்கிழமை
விரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் – மணமகன் யார் தெரியுமா?