பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருந்து வந்தனர்.
அதுபோக வனிதா வெளி வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த வாரம் தலைவராக நியமனம் செய்து அந்த ஆசையில் மண் அள்ளிப் போட்டு விட்டார் பிக் பாஸ் இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் நடைபெற்றது.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கவின் சேரன் மற்றும் ஷெரின் பெயரை நாமினேட் செய்கிறார்.
அதற்கு ஏன் என்று வனிதா கேட்க, என்னை அவ நாமினேட் செய்தால் இல்ல, என்னை வெளிய போனு சொன்னா இல்ல அதன் காரணம் என்று கூறுகிறார்.
மேலும், இந்த வாரம் வனிதா தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது.
அதே போல அவருக்கு ஒரு சிறப்பு பவரும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது என்ன பவர் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஒரு வேலை அது என்ன என்பது இன்று தெரிய வரலாம்.
தற்போது இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட் யார் யார் என்பது தற்போது நமக்கு தெரியவந்துள்ளது.
இந்த வாரமும் 4 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். அதில்,
ஷெரின்
லாஸ்லியா
கவின்
சேரன்
ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். எனவே, இந்த வாரம் எலிமினேஷன் மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாமினேஷன் இடம் பெற்று இருந்தால் அவர் கண்டிப்பாக வெளியேறி இருப்பா.ர் ஆனால், இம்முறை யார் வெளியேற போகிறார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
நமது கணிப்பின்படி இந்த வாரம் ஷெரின் மற்றும் அல்லாஹ் இருவரில் யாராவது வெளியே போக வாய்ப்பு இருக்கிறது.