பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது.
கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலைக்கு முயன்றது, வனிதா மீண்டும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளது என்று பல்வேறு எதிர்பாராத விஷயங்கள் நடந்து வருகிறது.
அதேபோல கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் கஸ்தூரி wildcard போட்டியாளராக களமிறங்கினார். எப்போதும் சமூகவலைதளத்தில் பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வரும் கஸ்தூரி.
பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் வனிதா இல்லாத குறையை தீர்த்து வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர் ஆனால், இவரோ பிக் பாஸ் வீட்டுக்குள் பொட்டி பாம்பாய் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3 குறித்து பேட்டி ஒன்றில் பேசிய பிக் பாஸின் முன்னாள் போட்டியாளர் டேனி, கஸ்தூரி குறித்து பேசுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து இதை இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம்.
இது எல்லாம் ஸ்க்ரிப்ட் என்று கூறுபவர்கள் எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றால் தான் தெரியும்.
அதற்கு ஒரு சிறப்பான உதாரணம் கஸ்தூரி தான்.
வெளியிலிருந்த வரை ட்விட்டரில் படு பயங்கரமாக ட்வீட் போட்டு வந்தார்.ஆனால் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற இரண்டு நாளில் அவரை சிறையில் உட்கார வைத்து விட்டனர்.
கஸ்தூரி போன்ற ஆட்கள் எல்லாம் எப்படி தெரியுமா இந்த பிடிக்காதவர்களை எல்லாம் கக்கூசில் கெட்ட வார்த்தையில் எழுதி வைத்து விட்டு செல்வார்களே அவர்களைப் போல தான்.
சும்மா வெளியில் வேண்டுமானால் பந்தா காண்பித்துக் கொள்வார்கள்.
ஆனால், உள்ளே ஒன்றுமே கிடையாது வெறும் புஸ்ஸு தான் என்று கூறியுள்ளார்.