சேரன்

துவங்கியது இந்த வார நாமினேஷன்.! நாமினேட் செய்த நபரிடமே கூறிய சேரன்.!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 85 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.

இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. மேலும் இன்னும் ஏழு போட்டியாளர்களில் இருக்கும் நிலையில் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் நாமினேஷனில் இடம்பெற மாட்டார்.

எனவே மீதமுள்ள ஆறு பேரில் யார் நாமினேட் ஆவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வராத்திக்கான நாமினேட் லிஸ்ட் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த வாரம் அதில் சேரன், கவின், லாஸ்லியா ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர்.

அது மட்டுமில்லாமல் இந்த முறை யார் பேரால் நாமினேட் ஆகியுள்ளனர் என்ற விவரமும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வாரம் கவினை தான் அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் சேரன், கவின் மற்றும் சாண்டியை நாமினேட் செய்துள்ளார்.

மேலும், அவர்களை நாமினேட் செய்துவிட்டு பின்னர் சாண்டியிடமே உங்களையும் கவினையும் தான் நாமினேட் செய்தேன் என்று நேரடியாக கூறியுள்ளார் சேரன்.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …