யார் மீண்டும் வர வேண்டும் என்று கேட்ட கமல்.! சேரன் கூறியது இவரை தான்.!நீக்கப்பட்ட ஏன்.!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாகவே சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டுதான் இருக்கிறது இந்த வாரம் எழிமினேஷன் இல்லை என்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இருக்கும் சுவாரஸ்யம் இந்த வாரம் இல்லை இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்களுக்கு ஒரு சில கருத்துக்களையும் கேள்விகளையும் கொடுத்திருந்தார்.

நேற்றைய நிகழ்ச்சியில் கமல் போட்டியாளர்களிடம் ஒரு சிறு கேம் ஒன்றை விளையாடினார் அதில் ஒருவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நபர்கள் யார் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ளே வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டு இருந்தார்.

அப்போது மற்ற போட்டியாளர்கள் தங்களது கருத்துக்களை கூற சேரன் கூறியது மட்டும் காண்பிக்கபடவில்லை ஆனால், சேரன் நேற்று மதுமிதா மீண்டும் உள்ளே வந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறியுள்ளாராம்.
மீரா தான் இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளரா?
கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் விதிகளை மீறினார் என்று பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மதுமிதா சம்பள பாக்கியை உடனடியாக தர வேண்டுமென்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விஜய் தொலைக்காட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதுகுறித்து பிரஸ் மீட் வைத்த மதுமிதா தான் எந்த ஒருகொலை மிரட்டலையும் விட வில்லை என்றும் தனக்கு கிடைக்க வேண்டிய சம்பள பாக்கியை பற்றி நான் பேசவில்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால், மதுமிதா குறித்து பிக் பாஸ் வீட்டில் பேசினால் கூட அதனை நீக்கும் அளவிற்கு மதுமிதா மீது பிக் பாஸ் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதே இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாக புலப்படுகிறது.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …