பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3யில் கடந்த சில நாட்களாக ஹவுஸ் மேட்ஸ் இரு கிராமங்களாகப் பிரிந்து விளையாடி வந்தனர்.
கீரிப்பட்டி மற்றும் பாம்பு பட்டி என்று பிரிந்து விளையாடிய இதில் வழக்கம் போல் சண்டை சச்சரவுக்குப் பஞ்சமில்லாமல் சென்றது.
ஒரு வழியாக அந்த டாஸ்க் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒரு டாஸ்க் முடிந்தால் அதில் சிறப்பாக விளையாடிய மூன்று நபர்கள் மற்றும் டாஸ்க்கில் சரியாக விளையாடாதவர்கள் பெயரை பிக் பாஸ் அறிவிக்கும் படி கூறுவார்.
அதே போன்று இந்த டாஸ்க்கிற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மீரா சரியாக விளையாடியதாக ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒரு மனதாகத் தேர்வு செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மதுமிதா, ‘டாஸ்க்கில் அடிக்கடி அனைத்தையும் personal ஆகா எடுத்துக்கொண்டது மீரா தான்.
அவங்க பெயரை எப்படி நீங்க சொல்லுவீங்க?’என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். உடனே இது தான் சரியான சமயம் என்று சேரன், ‘மீரா மீது எவளோ தப்பு இருக்கு’ என்று மதுமிதாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்.
கடைசியில் மீரா, ‘எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, மதுவுக்கே சிறந்த போட்டியாளர் பட்டம் கொடுத்துடுங்கள்’ என்று ஒதுங்கிக் கொள்கிறார்.
இதைக் கண்ட ரசிகர்கள் மதுவின் நியாயமான செயலுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.