கவின்

மன்னிப்பு கேட்டு மீண்டும் லாஸ்லியாவுடன் இணைந்த கவின்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பித்து வெற்றிகரமாக நான்கு வாரம் கடந்த விட்டது.

முதலில் பாத்திமா பாபு வெளியேற அவரை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் வனிதா மற்றும் மோகன் வைத்யா வெளியேறியுள்ளனர்.

கடந்த வாரம் முழுக்க கவின், சாக்ஷி, லாஸ்லியாவின் முக்கோண காதல் கதையே ஒளிபரப்பப்பட்டன.

ஆனால் வார இறுதி நாளில் கவின் தான் செய்த தவறை உணர்ந்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியா கவினிடம் மிகவும் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்பது போல் காட்டப்பட்டுள்ளது.

லாஸ்லியா, கவினை அழைத்து, ‘sorry… நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக sorry கேட்குறன்… எனக்கு நீ நடித்ததா தெரியல.

நான் சுகமில்லாத சமயத்தில் என்னை வந்து நீ பார்த்துத்திருக்க. அதுல நீ நடிக்கிற சொல்லிவிட்டேன் தெரியாம’ என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறார்.

இதை கேட்ட கவின் ‘பரவாயில்லை டன் என்று சொல்லிவிட்டு லாஸ்லியாவிடம் இருந்து விளிக்கிறார்’.

இதை பார்த்த ரசிகர்கள் ‘லாஸ்லியா கூட சமாதானம் பண்ணியாச்சு அப்போ சாக்ஷி நிலைமை என்ன?’என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://twitter.com/vijaytelevision/status/1153190437567389696

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …