மதுமிதா

நிறைய பேர் கேட்டும் லைவ்ல வரமுடியல..ஏன் தெரியுமா ? -உருகிய பிக்பாஸ் மதுமிதா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து சில பிரச்சனைகளால் வெளியேறிய மதுமிதா தனது தற்போதைய சூழ்நிலை குறித்து பேசி வீடியோ பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி இப்படி அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி.100 நாட்கள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பரிசுகள் வழங்கப்படும்.ஜூன் 23ம் தேதி தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.

தொடங்கிய சில நாட்களிலே வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது.திடீரென ஒரு நாள் விதிமுறைகளை மீறி தன்னை தானே மதுமிதா வருத்தி கொண்டதால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.பின்பு அவர் ஏன் அப்படி செய்தார் என்பதை கூறவில்லை.
https://twitter.com/iamrajesh_raj/status/1173485348434743296
அதன் பின்பு மதுமிதா விஜய் டிவியிடம் பணம் கேட்டதாக புகார்களும் எழுந்தது.இப்படி பல சர்ச்சைகள் எழவே மதுமிதா அனைவருக்கும் பேட்டி அளித்து நடந்தது பற்றி விளக்கமளித்தார்.

இன்று அவருக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.’நிறைய பேரு லைவ்-ல வாங்க உங்கள பாக்கணும் அப்படினு கேட்டீங்க, ஆனா என்னால வரமுடியல, எனக்கு ஆதரவளித்த எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப நன்றி.இப்போதான் மனதளவிலும், உடலளவிலும் குணமாயிட்டு வரேன் .

ஷூட்டிங் கூட போக ஆரம்பிச்சிட்டேன்.எல்லாருக்கும் நன்றி என கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …