மீரா

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த காவலர்களால் பரபரப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மீராமிதுனிடம் சம்மன் அளிக்க பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த காவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் தனியார் தொலைக்காட்சி சார்பில், பிரமாண்டமான அரங்கு அமைத்து பிக்பாஸ் சீசன் – 3 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.

100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு நபர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல மாடலிங் அழகியும், தென்னிந்திய அழகி பட்டம் வென்றவருமான மீரா மிதுன் பங்கேற்றுள்ளார்.

இவர் மீது ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் எழும்பூர் காவல்நிலையத்தில் பணமோசடி புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் “பிக் பாஸ்” படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு சென்றனர்.

இதில் 10 நாட்களில் உரிய விளக்கம் அளிப்பதாக மீராமிதுன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …