கிளிநொச்சி

150 ஏக்கர் காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்கவுள்ள இராணுவம்..!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகளில் 150.15 ஏக்கர் காணி இன்று (18) விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இத்தகவலை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

படையினர் வசமிருந்த காணிகளில் விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட மக்களின் காணிகளே இவ்வாறு அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

இன்று காலை குறித்த காணிகள் படையினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப் படவுள்ளதாகக் கிளிநொச்சி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பில் பல்வேறு கூட்டங்கள் இடம் பெற்று வந்த நிலையில் அண்மையில் ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட போது, மேலும் சில காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவை விடுவிக்கப்பட ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாகவும் கிளிநொச்சி இராணுவ தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள இராணுவ தளபதி, குறித்த காணிகள் விடுவிப்பது தொடர்பான ஆவணங்களைக் கையளிப்பார் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பொறுப்பேற்ற பின்னரே மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான அழுத்தம் காரணமாக அதிகளவான காணிகளை விடுவி்ப்பதற்கு நடவடிக்கை இராணுவம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க :

நல்லிணக்க அடிப்படையில் 3 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

சீமான் மக்களால் புறக்கணிக்கப்படுவார் – அமைச்சர் கடம்பூர் ராஜு

சென்னையிலிருந்து யாழ்பாணத்துக்கு விமான சேவை!

ஈழப்போரை தாங்கள்தான் நடத்தியதுபோன்ற பிம்பத்தை சிலர் உருவாக்குகிறார்கள்: கருணாஸ் காட்டம்

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …