இந்தி நடிகை ரூஹி சிங்
இந்தி நடிகை ரூஹி சிங்

போதையில் போலீஸிசை தாக்கிய டிவி நடிகை!!!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இந்தி நடிகை ரூஹி சிங் போதையில் காரை ஓட்டி வாகனங்களை சேதப்படுத்தியதோடு போலீஸாரையும் தாக்கியுள்ளார்.

நடிகர் நடிகைகள் போதையில் வாகனங்களை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.

மும்பையில் இந்தி தொலைகாட்சி தொடர்களின் தொகுப்பாளினியாக இருப்பவர் ரூஹி சிங்.

சமீபத்தில் பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் குடித்துவிட்டு காரை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

போதையில் இருந்த அவர் ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த வண்டியை சேதப்படுத்தினார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அவரை தட்டிக்கேட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ரூஹி சிங்கிடம் விசாரித்தனர்.

அப்போது ரூஹி இரு போலீஸ்காரர்களை கன்னத்தில் அறைந்தார்.

இதையடுத்து போலீஸார் அவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்துள்ளனர்.

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …