சிறுபான்மையினரை

சிறுபான்மையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும் சிறுபான்மையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதல்களை அடுத்து இலங்கையில் வன்முறைகள் பதிவாகி உள்ளன.

அரசாங்கம் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில், நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த தினங்களில் நாட்டின் சில இடங்களில் வன்முறைகள் பதிவாகி இருந்தன.

இந்த வன்முறைகள் மேலும் எங்கும் பரவாத வண்ணம் தடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திடமும், அதிகாரிகளிடமும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாரை நம்புவது

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …