திரிஷா

அது மட்டும் ஓகே ஆச்சுன்னா நாளைக்கே திருமணம் தான்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

திரிஷா சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த திரிஷா, பல புதுமுகங்களின் வரவால் அவருடைய மார்க்கெட் டல்லடித்தது.

அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்தவருக்கு அதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை.

பிறகு தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையில் காதல் என தென்னிந்தியாவில் கிசுகிக்க அவர்களோ நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று சொல்லி எஸ்கேஎப் ஆகினர்.

ஆனால், திரைப்பட விழாக்கள், திரையுலக விழாக்கள், விருதுவிழாக்கள் என அனைத்திலும் இருவரும் ஜோடியாக வந்து சென்றனர்.

த்ரிஷாவின் திருமணம் பாதியிலே நின்றபோது ராணா – த்ரிஷா பற்றிய காதல் செய்திகள் றெக்கை கட்டி பறக்க பறந்தது. ஆனாலும் மூச்சு கூட விடாமல் ரகசியத்தை பாதுகாத்துவந்தார் திரிஷா.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று திரிஷா தனது திருமணம் குறித்து பேசுகையில், இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை.

ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …