கஸ்தூரி

கமல்ஹாசனை வம்பிழுத்த கஸ்தூரி? கொதிக்கும் ரசிகர்கள்…

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி தற்போது நடிகர் கமல்ஹாசனை விமர்சித்து பேசியுள்ளார்.

சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை கஸ்தூரி, திரைத்துறை, கிரிக்கெட், அரசியல், சமூக அவலங்கள் பற்றின தனது கருத்துக்களை அவ்வப்போது டிவிட்டரில் பகிர்வார்.

பலர் இவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் சிலர் இவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பர்.

ஆனால் சில சமயங்களில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு சிக்கலில் சிக்குவார்.

அப்படி சமீபத்தில் கூட எம்.ஜி.ஆர் – லதா குறித்து சர்ச்சையான கருத்தை பதிவிட்டு சிக்கலில் சிக்கினார்.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் யாருக்கு ஓட்டு போடனும் பற்றி ஒரு விளம்பரத்தை வெளியிட்டார்.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில் பேசறதுதான் புரியலைன்னா, விளம்பரமும் புரியமாட்டேங்குதே!

என நடிகர் கமலை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். இதனால் கமல் ரசிகர்கள் கஸ்தூரிக்கு எதிராக கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …