ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி தன் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, புதிய கல்விக் கொள்கை குறித்தும், மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது என்றும் பேசினார்.
சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து சூர்யாவின் பேச்சுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார்.
இந்த வரைவு அறிக்கை மீதான ஆக்கப்பூர்வமான கருத்துக்களைக் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் https://innovate.mygov.in/new-education-policy-2019/ என்ற இணையதளத்தில் இம்மாத இறுதிக்குள் பதிவு செய்து செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன்.
மத்திய அரசும் அனைத்து தரப்பினர் கருத்துக்களையும் கேட்டறிந்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன்.
ஏழை மாணவர்களுக்குக் கல்வியே உயரப் பறப்பதற்கான சிறகு. அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம்’ இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.