முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடிப் பகுதியில் இன்று மாலை மின்னல் தாக்கியத்தில் 17 வயதான மாணவன் ஒருவர் பலியானத்தோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர்.
மாலை வேளை மழை பெய்வதன் காரணமாக மழைக்காக வீதியின் ஓரத்தில் இருந்த நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கிய சமயம் மரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது.
இதனால் மரத்தின் கீழ் நின்ற இரண்டு மாணவர்களில் ஒருவர் பலியானதோடு மற்றவர் காயமடைந்துள்ளார்.
இந்த மின்னல் தாக்குதலில் விசுவமடு மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும் தர்மபாலசிங்கம் தயானந்தன் (வயது 17) என்ற மாணவர் பலியானத்தோடு எஸ்.கிரிசாந்தன் என்ற மாணவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.