சூப்பர் ஸ்டார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்… ?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் நல்ல வரவேற்பை பெற்றது. பேட்ட படத்துக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது மகள் செளந்தர்யாவின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்தார் ரஜினி.

செளந்தர்யாவுக்கு கடந்த 11 ஆம் தேதி திருமணம் சிறப்பாக முடிவுற்றது. எனவே, அடுத்து மீண்டும் படத்தில் கவனம் செலுத்த உள்ளார் ரஜினி. அடுத்து ரஜினியின் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அப்படி நயன்தாரா ஒப்புக்கொண்டால் சூப்பர் ஸ்டாரையும் லேடி சூப்பர் ஸ்டாரையும் திரையில் ஒன்றாக பார்க்க முடியும்.

ஏற்கனவே, சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தாலும் இப்போது இருவரையும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவளாக இருக்கின்றனர்.

About அருள்

Check Also

ரஜினிகாந்த்

என் மீது நம்பிக்கை வையுங்கள், அது வீண்போகாது: ரஜினிகாந்த் பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!12Sharesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை …