பிங்க்

பிங்க் vs நேர்கொண்ட பார்வை – என்னென்ன மாற்றங்கள் ?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழில் ரீமேக்காகி வரும் பிங்க் படத்தை அப்படியேப் படமாக்காமல் அதில் சில மாற்றங்கள் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டி ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் பிங்க். இதில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்திய அளவில் இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாகப் பாராட்டுகள் குவிந்தன.

இதனை தற்ப்போது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் ரீமேக் செய்துவருகிறார்.

அஜித், அமிதாப் நடித்த கேரக்டரில் நடித்து வரும் இப்படத்திற்கு நேர்கொண்ட பார்வை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் இதன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்தி பிங்கை அப்படியே ரீமேக் செய்யாமல் அதில் சில மாற்றங்களை செய்து படமாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் முன்னர் அறிவித்தப்படி படம் மே 1 ரிலிஸில் இருந்து தள்ளிப்போகவுள்ளதாகவும் தெரிகிறது.

விஸ்வாசம் படத்தின் அமோக வரவேற்பை அடுத்து இன்னமும் சில தியேட்டர்களிலும் ஸ்ட்ரிமிங்க் இணையதளங்களிலும் பரவலான வரவேற்பைப் பெற்று வருவதாலும் நேர்கொண்ட பார்வைத் தள்ளிப் போகும் என தெரிகிறது.

அஜித்துடன் இதில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …