திரைப்படங்களில் அறிமுகமாகும் ஒரு சில நடிகைகள் அறிமுகமான முதல் ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளனர்.
அந்த வகையில் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான யாஷிகா ஆனந்தும் ஒருவர்.
நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் கதாநாயகனுக்கு இணையான இரட்டை அர்த்த வசனங்களை பேசி மக்கள் மனதில் நன்றாக பதிந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
வெறும் 19 வயதான இந்த இளம் நடிகை பார்ப்பதற்கு வளர்ந்த நடிகை போல தோற்றத்தை கொண்டிருந்தார்.
இதனால் தனது 14 வயதிலேயே துருவங்கள் பதினாறு என்ற படத்தில் நடித்திருந்தார்.
ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் தான்.
அந்தப் படத்தின் மூலம் இவருக்கு என்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் துவங்கப்பட்டது.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்து இருந்தது.
https://www.instagram.com/p/B4UwABsFS3d/?utm_source=ig_web_copy_link
இருட்டு அறையில்முரட்டு குத்து படத்தில் நடித்தது போலவே பிக்பாஸ் வீட்டிலும் இவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து இளசுகளின் கவனத்தை ஈர்த்தார்.
மேலும், மஹத்துடன் இவர் செய்த ரொமான்ஸ் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது. இருப்பினும் நிகழ்ச்சிகள் இவர் செய்த டாஸ்க் மூலம் ரசிகர்களின் கவனத்தையும் அன்பையும் பெற்றிருந்தார்.
மேலும், இவர் பிக் பாஸ் பட்டத்தை வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம். அதே போல இவர் பதிவிடும் பல்வேறு புகைப்படங்கள் சர்ச்சையில் தான் முடிகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரும் ஐஸ்வர்யா தத்தா மற்றும் இவரது நண்பரும் குடித்துவிட்டு லைவ் சாட்டில் வந்து இருந்தனர். அப்போது இவரை இழுத்து அணைத்து இவரது நண்பர் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து விட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் பரவி வந்தது.
மேலும், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வெறித்தனமாக உடற்பயிற்சியையும் செய்கிறார் யாஷிகா. சமீபத்தில் பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு சென்ற யாஷிகா வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
அந்த வீடியோவில் ஒய்யார நடை போட்டு ஹோட்டலுக்கு செல்லும் யாஷிகாவை பார்த்து ரசிகர்கள் கமென்டை அல்லி வீசி வந்தனர்.
அந்த வகையில் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனா, யாஷிகாவின் இந்த விடீயோவிற்கு கமன்ட் செய்தார். அதில், இதற்கு மேலயும் சிலம் ஆனால், உன்னை கொன்று விடுவேன்.
இதோடு நிறுத்திக்கொள் ஹாட்டி. அதற்கு பதில் அளித்த யாஷிகா, கண்டிப்பாக செய்ய மாட்டேன் என்று கமன்ட் செய்துள்ளார். மேலும், ரசிகர் ஒருவர், நீங்கள் சாப்பிடுகிறீர்களா இல்லையா என்று கேள்வி கேட்டதற்கு, நான் பைத்தியமாக உடற் பயிற்சி செய்யவேண்.
இதனால் சமீபத்தில் நிலை கூட சரியில்லாமல் போனது என்று பதில் அளித்துள்ளார் யாஷிகா.
இதையும் பாருங்க :
நல்லிணக்க அடிப்படையில் 3 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
சீமான் மக்களால் புறக்கணிக்கப்படுவார் – அமைச்சர் கடம்பூர் ராஜு
சென்னையிலிருந்து யாழ்பாணத்துக்கு விமான சேவை!
ஈழப்போரை தாங்கள்தான் நடத்தியதுபோன்ற பிம்பத்தை சிலர் உருவாக்குகிறார்கள்: கருணாஸ் காட்டம்